ஒரே மாதத்தில் 1.90 கோடி வாடிக்கையாளர்களை இழந்த ஜியோ.. 2.7 லட்சம் புதிய இணைப்புகளை வழங்கிய ஏர்டெல்

 
ஒரே மாதத்தில் 85 லட்சம் புதிய இணைப்புகள்: தொலைத்தொடர்பு துறையில் போட்டி நிறுவனங்களை கொஞ்சம் கொஞ்சமாக விழுங்கும் ஜியோ

கடந்த செப்டம்பர் மாதத்தில் ஜியோ நிறுவனம் 1.90 கோடி மொபைல் இணைப்புகளை இழந்துள்ளது. அதேசமயம் அந்த மாதத்தில் ஏர்டெல் புதிதாக 2.7 லட்சம் மொபைல் இணைப்புகளை வழங்கியுள்ளது.


நம் நாட்டில்  தற்போது ஜியோ, ஏர்டெல், வோடோபோன் ஐடியா மற்றும் பொதுத்துறையை சேர்ந்த பி.எஸ்.என்.எல். ஆகிய நிறுவனங்கள் மட்டுமே தொலைத்தொடர்பு வர்த்தகத்தில் ஈடுபட்டு வருகின்றன. கடந்த சில ஆண்டுகளுக்கு முன் முகேஷ் அம்பானியின் ஜியோ நிறுவனம் தொலைத்தொடர்பு துறையில் இறங்கிய பிறகு இந்த துறையின் முகமே மாறி விட்டது. இலவச கால்கள், குறைந்த கட்டணத்தில் டேட்டா உள்ளிட்டவை ஜியோவின் வருகைக்கு பிறகுதான் நடந்தது.  ஜியோவின் போட்டியை தாக்குபிடிக்க முடியாமல் பல தொலைத்தொடர்பு நிறுவனங்கள் தங்களது வர்த்தகத்தை இழுத்து மூடி விட்டன.

பார்தி ஏர்டெல்

தொலைத்தொடர்பு துறை ஒழுங்கு முறை ஆணையமான டிராய் குறிப்பிட்ட கால இடைவெளிகளில் தொலைத்தொடர்பு துறை நிறுவனங்களின் இணைப்புகள் குறித்த புள்ளிவிவரங்களை வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் தற்போது தொலைத்தொடர்பு நிறுவனங்களின் கடந்த செப்டம்பர் மாத இணைப்புகள் குறித்த புள்ளிவிவரத்தை வெளியிட்டுள்ளது. அந்த புள்ளிவிவரத்தின்படி, கடந்த செப்டம்பர் மாதத்தில் தொலைத்தொடர்பு நிறுவனங்களில் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் 1.90 கோடிக்கும் அதிகமாக மொபைல் இணைப்புகளை இழந்துள்ளது. இதனையடுத்து அந்நிறுவனத்தின் செயல்பாட்டில் உள்ள மொத்த மொபைல் இணைப்புகளின் எண்ணிக்கை 42.48 கோடியாக குறைந்துள்ளது.

வோடாபோன் ஐடியா

அதேசமயம் கடந்த செப்டம்பர் மாதத்தில் பார்தி ஏர்டெல் நிறுவனம் புதிதாக 2.7 லட்சம் புதிய இணைப்புகளை வழங்கியுள்ளது. இந்நிறுவனத்தின் மொத்த மொபைல்  இணைப்புகளின் எண்ணிக்கை 35.44 கோடியாக உயர்ந்துள்ளது. அதேசமயம் நாட்டின் முன்னணி தொலைத்தொடர்பு நிறுவனங்களில் ஒன்றான வோடாபோன் ஐடியா 10.7 லட்சம் இணைப்புகளை இழந்துள்ளது. இந்நிறுவனத்தின் செயல்பாட்டில் உள்ள இணைப்புகளின் எண்ணிக்கை 26.99 கோடியாக உள்ளது.  கடந்த செப்டம்பரில் நம் நாட்டின் மொபைல் இணைப்புகளின் எண்ணிக்கை 2.07 கோடி குறைந்து 116 கோடியாக சரிவடைந்துள்ளது.