விமான எரிபொருள் செலவினம் அதிகரிப்பு.. ரூ.562 கோடியை நஷ்டமாக சந்தித்த ஸ்பைஸ்ஜெட் நிறுவனம்

 
ஸ்பைஸ் ஜெட்

ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் 2021 செப்டம்பர் காலாண்டில் ரூ.562 கோடியை நிகர இழப்பாக சந்தித்துள்ளது. 

விமான சேவையில் ஈடுபட்டு வரும் தனியார் விமான சேவை நிறுவனமான ஸ்பைஸ்ஜெட் தனது கடந்த செப்டம்பர் காலாண்டு நிதி முடிவுகளை அண்மையில் வெளியிட்டுள்ளது. ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் 2021 செப்டம்பர் காலாண்டில் ரூ.562 கோடியை நிகர இழப்பாக சந்தித்துள்ளது. இது சென்ற ஆண்டின் இதே காலாண்டைக் காட்டிலும் மிகவும் அதிகமாகும். 2020 செப்டம்பர் காலாண்டில் ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் ரூ.112.5 கோடியை நிகர இழப்பாக சந்தித்து இருந்தது.

ஸ்பைஸ்ஜெட்
2021 செப்டம்பர் காலாண்டில் ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்தின் வருவாய் ரூ.1,342.5 கோடியாக உயர்ந்துள்ளது. இது 2020 செப்டம்பர் காலாண்டைக் காட்டிலும் 27 சதவீதம் அதிகமாகும். கொரோனா பாதிப்பு குறைந்தது மற்றும் தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களின் விகிதம் அதிகரிப்பால் பொருளாதார நடவடிக்கைகள் மீண்டும் வேகம் எடுக்க தொடங்கியிருப்பது இந்நிறுவனத்தின் வருவாய் உயர்வுக்கு மிகவும் உதவியது.

ஸ்பைஸ்ஜெட்

விமான எரிபொருள் செலவினம் உள்ளிட்ட செயல்பாட்டு செலவினங்கள் அதிகரித்ததால் ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் நிகர நஷ்டத்தை சந்தித்துள்ளது. 2021 செப்டம்பர் காலாண்டில் ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்தின் விமான எரிபொருள் செலவினம் 120 சதவீதம் உயர்ந்து ரூ.615 கோடியாக உயர்ந்துள்ளது. மும்பை பங்குச் சந்தையில் கடந்த வெள்ளிக்கிழமையன்று பங்கு வர்த்தகம் முடிவடைந்தபோது ஸ்பைஸ்ஜெட் நிறுவன பங்கின் விலை முந்தைய வர்த்தக தினத்தை காட்டிலும் 7.10 சதவீதம் குறைந்து ரூ.75.20ஆக இருந்தது.