ஐபிஓ வெளியீடுகளால் டிசம்பரில் ஏற்றம் பெற உள்ள பங்குச் சந்தைகள்!

 

ஐபிஓ வெளியீடுகளால் டிசம்பரில் ஏற்றம் பெற உள்ள பங்குச் சந்தைகள்!

டிசம்பர் மாதத்தில் முக்கிய நிறுவனங்களின் பொதுப்பங்கு வெளியீடுகளால், இந்திய பங்குச் சந்தைகள் கிடு கிடு ஏற்றம் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஐபிஓ வெளியீடுகளால் டிசம்பரில் ஏற்றம் பெற உள்ள பங்குச் சந்தைகள்!

இந்திய பங்குச் சந்தைகளில் கடந்த 8 மாதங்களாக பொதுப் பங்கு வெளியீடுகள் மூலம் நிதி திரட்டல் குறைந்த நிலையில் வரும் டிசம்பர் மாதத்தில் 3 அல்லது4 நிறுவனங்கள் ஐபிஓ வரும் என எதிர்பார்ப்பு உள்ளது. கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்தில் சுமார் 16 நிறுவனங்கள் ஐபிஓ மூலம் நிதி திரட்டியது குறிப்பிடத்தக்கது. கடந்த மார்ச் மாதத்தில் மும்பை பங்குச்சந்தையில் எஸ்பிஐ கார்டு பொதுப் பங்கு வெளியீட்டுக்கு பின்னர், ஐபிஓ மூலம் நிதி திரட்டுவது குறைந்தது. கொரோனா வைரஸ் ஊரடங்கு காரணமாக, தொழில்துறை நடவடிக்கைகள் முடங்கியதால், முதலீடு திரட்டுவதும் முடங்கியது. இந்த ஆண்டு ஜனவரி மாதத்திலில் இருந்த ஏற்றத்துடன் ஓப்பிடுகையில், மார்ச் மாதத்தில் பங்குச் சந்தை 25% வீழ்ச்சி அடைந்தது. அதன் பின்னர் பங்குச் சந்தையில் ஆகஸ்ட் மாதத்துக்கு பிறகுதான் ஏற்றம் கண்டது.

ஐபிஓ வெளியீடுகளால் டிசம்பரில் ஏற்றம் பெற உள்ள பங்குச் சந்தைகள்!
மும்பை பங்குச் சந்தை

கடந்த ஜூலை மாதத்தில் ரோசரி பயோடெக் நிறுவனம் ஐபிஓ வெளியிட்டது. ஆனால், கொரோனா தொற்று அச்சம் காரணமாக பத்திரிக்கையாளர் சந்திப்பு தவிர்க்கப்பட்டது. அப்போது இருந்த சூழலில், இந்த பங்குகளில் முதலீட்டாளர்கள் ஆர்வம் காட்டவில்லை. இதையடுத்து இந்த நிறுவனம் மீண்டும் பங்குச் சந்தையில் பட்டியலிட திட்டமிட்டுள்ளது. ஹேப்பிஸ் மைண்ட் டெக்னாலஜி, ரூட் மொபைல், மஸகான் கப்பல் கட்டும் நிறுவனம் உள்ளிட்டவை பட்டியலிட திட்டமிட்டுள்ளன. இந்த நிறுவனங்களில் முதலீடு செய்ய சிறு முதலீட்டாளர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

ஐபிஓ வெளியீடுகளால் டிசம்பரில் ஏற்றம் பெற உள்ள பங்குச் சந்தைகள்!

தொழில்துறை நடவடிக்கைகள் மீண்டும் வளர்ச்சி அடைந்து வரும் நிலையில் சிறு நிறுவனங்கள் முதலீடு திரட்ட ஆர்வம் காட்டி வருகின்றன. சிறு நிறுவங்களின் நிதி திரட்டல் வளர்ச்சி அடையும்பட்சத்தில், பெரு நிறுவனங்களில் முதலீடு வளர்ச்சி பெறும் என எதிர்பார்ப்பு உள்ளது. இந்தியாவில் இருந்து வெளியேறிய அந்நிய முதலீடுகள், கடந்த மார்ச் மாதத்துடன் ஒப்பிடுகையில், மீண்டும் ஏற்றம் கண்டு வருகின்றன. நவம்பர் மாதத்தில் மட்டும் இந்திய பங்குச் சந்தைகளில் ரூ.55,577 கோடி வெளிநாட்டு முதலீடு செய்யப்பட்டுள்ளது. 2020ம் ஆண்டில் இதுவரை 96,766 கோடி ரூபாய் முதலீடு ஈர்த்துள்ளது குறிப்பிடத்தக்கது. 2020 ஆண்டில் மட்டும் இதுவரை 13 நிறுவனங்கள் ஐபிஓ வெளியிட்டு சுமார் 29 ஆயிரத்து 477 கோடி ரூபாய் திரட்டி உள்ளன. இந்த நிலையில், அடுத்த மாதத்தில் மேலும் 3 அல்லது 4 நிறுவனங்கள் ஐபிஓ வரும் என எதிர்பார்ப்பு உள்ளது.