வருவாய் அமோகம்.. ருச்சி சோயா இண்டஸ்ட்ரீஸ் லாபம் ரூ.164 கோடி..

 
ருச்சி சோயா இண்டஸ்ட்ரீஸ்

ருச்சி சோயா இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம் 2021 செப்டம்பர் காலாண்டில்  நிகர லாபமாக ரூ.164.27 கோடி ஈட்டியுள்ளது. 

பாபா ராம்தேவ் தலைமையிலான ருச்சி சோயா இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம் தனது கடந்த செப்டம்பர் காலாண்டு நிதி நிலை முடிவுகளை வெளியிட்டுள்ளது. ருச்சி சோயா இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம் 2021 செப்டம்பர் காலாண்டில்  நிகர லாபமாக ரூ.164.27 கோடி ஈட்டியுள்ளது. இது 2020 செப்டம்பர் காலாண்டைக் காட்டிலும் 29.62 சதவீதம் அதிகமாகும். அந்த காலாண்டில் ருச்சி சோயா இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம் நிகர லாபமாக ரூ.126.73 கோடி ஈட்டியிருந்தது.

பாபா ராம்தேவ்

2021 செப்டம்பர் காலாண்டில் ருச்சி சோயா இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் நிகர வருவாய் ரூ.6,010.99 கோடியாக உயர்ந்துள்ளது. 2020 செப்டம்பர் காலாண்டில் ருச்சி சோயா இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம் நிகர வருவாயாக ரூ.3,990.72 கோடி ஈட்டியிருந்தது. 2021 செப்டம்பர் காலாண்டில் ருச்சி சோயா இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் செலவினம் ரூ.5,790.52 கோடியாக அதிகரித்துள்ளது.

ருச்சி சோயா இண்டஸ்ட்ரீஸ்

மும்பை பங்கு சந்தையில் நேற்று பங்கு வர்த்தகம் முடிவடைந்த போது ருச்சி சோயா இண்டஸ்ட்ரீஸ் நிறுவன பங்கின் விலை முந்தைய வர்த்தக தினத்தை காட்டிலும் 0.05 சதவீதம் உயர்ந்து ரூ.948.80ஆக இருந்தது.