”ரூ. 351க்கு 100 ஜிபி, 56 நாள் வேலிடிட்டி”புதிய பிரீபெய்ட் திட்டம் – Vi அறிமுகம்

”ரூ. 351க்கு 100 ஜிபி, 56 நாள் வேலிடிட்டி”புதிய பிரீபெய்ட் திட்டம் – Vi அறிமுகம்

Vi என பெயர் மாற்றிக்கொண்ட வோடபோன் ஐடியா நிறுவனம், 351 ரூபாய்க்கு100 ஜிபி டேட்டா அளிக்கும் புதிய பிரிபெய்ட் திட்டத்தை அறிமுகப்படுத்தி உள்ளது.

”ரூ. 351க்கு 100 ஜிபி, 56 நாள் வேலிடிட்டி”புதிய பிரீபெய்ட் திட்டம் – Vi அறிமுகம்

வீட்டிலிருந்து பணிபுரிந்து வரும் நபர்களை இலக்காகக்கொண்டு இந்த புதிய திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. 56 நாட்கள் வேலிடிட்டி உடன் கிடைக்கும் இந்த திட்டத்தின் கீழ் மொத்தம் 100 ஜிபி டேட்டா பெற முடியும். அதே சமயம் இதில் அழைப்புகள் மற்றும் எஸ்எம்எஸ் பயன்கள் கிடைக்காது என்றும் ஆட்- ஆன் திட்டமான இதை எந்த ரீசார்ஜ் திட்டத்துடன் சேர்த்தும் ரீசார்ஜ் செய்துகொள்ளலாம் என வோடபோன் தெரிவித்துள்ளது.

”ரூ. 351க்கு 100 ஜிபி, 56 நாள் வேலிடிட்டி”புதிய பிரீபெய்ட் திட்டம் – Vi அறிமுகம்

ஏற்கனவே 251 ரூபாய்க்கு 28 நாட்கள் வேலிடிட்டி உடன் 50 ஜிபி டேட்டா வை வோடபோன் வழங்கி வந்த நிலையில் இந்த புதிய ரூ. 351 திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. விஐ என பெயர் மாற்றம் செய்யப்பட்ட பின்னர், அந்நிறுவனம் அறிமுகப்படுத்தும் முதல் பிரீபெய்ட் திட்டம் இதுவாகும். ரூ. 351 திட்டம் தற்போது தேர்ந்தெடுத்த சில தொலைத்தொடர்பு வட்டங்களில் மட்டுமே கிடைக்கும் என்றும் விரைவில் நாடு முழுவதும் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

”ரூ. 351க்கு 100 ஜிபி, 56 நாள் வேலிடிட்டி”புதிய பிரீபெய்ட் திட்டம் – Vi அறிமுகம்

-எஸ்.முத்துக்குமார்