ஓ.என்.ஜி.சி. லாபம் ரூ.18,348 கோடி.. இடைக்கால டிவிடெண்ட் வழங்க ஒப்புதல்

 
ஓ.என்.ஜி.சி.

ஓ.என்.ஜி.சி. நிறுவனம் 2021 செப்டம்பர் காலாண்டில் லாபமாக ரூ.18,348 கோடி ஈட்டியுள்ளது. 

பொதுத்துறை நிறுவனமான ஆயில் அண்டு நேச்சுரல் கியாஸ் கார்ப்பரேஷன் (ஓ.என்.ஜி.சி.) நிறுவனம் தனது கடந்த செப்டம்பர் காலாண்டு நிதி முடிவுகளை வெளியிட்டுள்ளது. ஓ.என்.ஜி.சி. நிறுவனம் 2021 செப்டம்பர் காலாண்டில் லாபமாக ரூ.18,348 கோடி ஈட்டியுள்ளது. இது 2020 செப்டம்பர் காலாண்டைக் காட்டிலும் 565 சதவீதம் அதிகமாகும்.

ஓ.என்.ஜி.சி.

2021 செப்டம்பர் காலாண்டில் ஓ.என்.ஜி.சி. நிறுவனத்தின் வருவாய் 44 சதவீதம் உயர்ந்து ரூ.24,353 கோடியாக அதிகரித்துள்ளது. கச்சா எண்ணெய் விலை உயர்வு, மதிப்பு கூட்ட பொருட்களின் விலை உயர்வு போன்றவை ஓ.என்.ஜி.சி. நிறுவனத்துக்கு ஆதாயமாக அமைந்தது.

ஓ.என்.ஜி.சி.

ஓ.என்.ஜி.சி. நிறுவனம் தனது பங்குதாரர்களுக்கு பங்கு ஒன்றுக்கு ரூ.5.50 இடைக்கால டிவிடெண்ட் வழங்க ஒப்புதல் வழங்கியுள்ளது. மும்பை பங்குச் சந்தையில் நேற்று பங்கு வர்த்தகம் முடிவடைந்தபோது, ஓ.என்.ஜி.சி. நிறுவன பங்கின் விலை முந்தைய வர்த்தக தினத்தை காட்டிலும் 0.41 சதவீதம் குறைந்து ரூ.157.15ஆக இருந்தது.