கச்சா எண்ணெய், கியாஸ் விலை உயர்வு.. ரூ.504 கோடி லாபம் பார்த்த ஆயில் இந்தியா. இடைக்கால டிவிடெண்ட் பரிந்துரை

 
ஆயில் இந்தியா

ஆயில் இந்தியா நிறுவனம் 2021 செப்டம்பர் காலாண்டில் நிகர லாபமாக ரூ.504.46 கோடி ஈட்டியுள்ளது. 

கச்சா எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு உற்பத்தியில் ஈடுபட்டு வரும் பொதுத்துறை நிறுவனமான ஆயில் இந்தியா தனது செப்டம்பர் காலாண்டு நிதி முடிவுகளை வெளியிட்டுள்ளது. ஆயில் இந்தியா நிறுவனம் 2021 செப்டம்பர் காலாண்டில் நிகர லாபமாக ரூ.504.46 கோடி ஈட்டியுள்ளது. இது சென்ற ஆண்டின் இதே காலாண்டைக் காட்டிலும் 2 மடங்குக்கும் அதிகமாகும். 2020 செப்டம்பர் காலாண்டில் ஆயில் இந்தியா நிறுவனம் நிகர லாபமாக ரூ.238.95 கோடி ஈட்டியிருந்தது.

ஆயில் இந்தியா
2021 செப்டம்பர் காலாண்டில் லாபம் ஆயில் இந்தியா நிறுவனத்தின் வருவாய் ரூ.3,678.76 கோடியாக உயர்ந்துள்ளது. 2020 செப்டம்பர் காலாண்டில் ஆயில் இந்தியா நிறுவனத்தின் வருவாய் ரூ.2,281.12 கோடியாக இருந்தது. கடந்த செப்டம்பர் காலாண்டில் ஒரு பேரல் கச்சா எண்ணெய் விலை 71.35 டாலராக உயர்ந்தது. 2020 செப்டம்பர் காலாண்டில் ஒரு பேரல் கச்சா எண்ணெய் விலை 42.74 டாலராக இருந்தது.

ஆயில் இந்தியா

ஆயில் இந்தியா நிறுவனத்தின் இயக்குனர்கள் குழு தனது பங்குதாரர்களுக்கு பங்கு ஒன்றுக்கு ரூ.3.50 இடைக்கால டிவிடெண்ட் வழங்க பரிந்துரை செய்துள்ளது. மும்பை பங்குச் சந்தையில் கடந்த வெள்ளிக்கிழமையன்று பங்கு வர்த்தகம் முடிவடைந்தபோது ஆயில் இந்தியா நிறுவன பங்கின் விலை முந்தைய வர்த்தக தினத்தை காட்டிலும் 2.45 சதவீதம் உயர்ந்து ரூ.221.95ஆக இருந்தது.