மணப்புரம் பைனான்ஸ் லாபம் ரூ.370 கோடி.. இடைக்கால டிவிடெண்ட் அறிவிப்பு

 
மணப்பரம் பைனான்ஸ்

மணப்புரம் பைனான்ஸ்  2021 செப்டம்பர் மாதத்துடன் நிறைவடைந்த காலாண்டில் ஒட்டு மொத்த அளவில் நிகர லாபமாக ரூ.369.88 கோடி ஈட்டியுள்ளது. 

வங்கி அல்லாத நிதி சேவை நிறுவனமான மணப்புரம் பைனான்ஸ் தனது கடந்த செப்டம்பர் காலாண்டு நிதி முடிவுகளை வெளியிட்டுள்ளது. மணப்புரம் பைனான்ஸ்  2021 செப்டம்பர் மாதத்துடன் நிறைவடைந்த காலாண்டில் ஒட்டு மொத்த அளவில் நிகர லாபமாக ரூ.369.88 கோடி ஈட்டியுள்ளது. இது சென்ற ஆண்டின் இதே காலாண்டைக் காட்டிலும் சுமார் 8.8 சதவீதம் குறைவாகும். 2020 செப்டம்பர் காலாண்டில் மணப்புரம் பைனான்ஸ் ஒட்டு மொத்த அளவில் நிகர லாபமாக ரூ.405.44  கோடி ஈட்டியிருந்தது.

மணப்புரம் பைனான்ஸ்

2021 செப்டம்பர் காலாண்டில் மணப்புரம் பைனான்ஸ் நிறுவனம் செயல்பாட்டு வாயிலான வருவாயாக ரூ.1,531.92 கோடி ஈட்டியுள்ளது. 2020 காலாண்டில் மணப்புரம் பைனான்ஸ் செயல்பாட்டு வாயிலான வருவாயாக ரூ.1,565.58 கோடி ஈட்டியிருந்தது. மணப்புரம் பைனான்ஸ் நிறுவனத்தின் இயக்குனர்கள் குழு  பங்குதாரர்களுக்கு பங்கு ஒன்றுக்கு  0.75 காசுகள் இடைக்கால டிவிடெண்ட் வழங்க ஒப்புதல் அளித்துள்ளது.

மணப்புரம் பைனான்ஸ்

கடந்த செப்டம்பர் காலாண்டில் நடப்பில் உள்ள தங்க கடன் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை 24.1 லட்சத்திலிருந்து 25.1 லட்சமாக உயர்ந்துள்ளது. மும்பை பங்குச் சந்தையில் கடந்த வியாழக்கிழமையன்று பங்கு வர்த்தகம் முடிவடைந்தபோது மணப்புரம் பைனான்ஸ் நிறுவன பங்கின் விலை முந்தைய வர்த்தக தினத்தை காட்டிலும் 3.13 சதவீதம் குறைந்து ரூ.184.00ஆக இருந்தது