ஹீரோ மோட்டோகார்ப் லாபம் ரூ.865 கோடி.. பங்கு ஒன்றுக்கு மொத்தம் ரூ.35 டிவிடெண்ட் பரிந்துரை

 

ஹீரோ மோட்டோகார்ப் லாபம் ரூ.865 கோடி.. பங்கு ஒன்றுக்கு மொத்தம் ரூ.35 டிவிடெண்ட் பரிந்துரை

2021 மார்ச் காலாண்டில் ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் நிகர லாபமாக ரூ.865 கோடி ஈட்டியுள்ளது.

நாட்டின் மிகப்பெரிய இரு சக்கர வாகன தயாரிப்பு நிறுவனமான ஹீரோ மோட்டோகார்ப் தனது கடந்த மார்ச் காலாண்டு நிதி முடிவுகளை வெளியிட்டுள்ளது. 2021 மார்ச் காலாண்டில் ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் நிகர லாபமாக ரூ.865 கோடி ஈட்டியுள்ளது. இது சென்ற ஆண்டின் இதே காலாண்டைக் காட்டிலும் 39 சதவீதம் அதிகமாகும்.

ஹீரோ மோட்டோகார்ப் லாபம் ரூ.865 கோடி.. பங்கு ஒன்றுக்கு மொத்தம் ரூ.35 டிவிடெண்ட் பரிந்துரை
ஹீரோமோட்டோகார்ப்

2021 மார்ச் காலாண்டில் ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் செயல்பாட்டு வாயிலான வருவாய் ரூ.8,686 கோடியாக உயர்ந்துள்ளது. இது 2020 மாா்ச் காலாண்டைக் காட்டிலும் 39 சதவீதம் அதிகமாகும். மும்பை பங்குச் சந்தையில் நேற்று பங்கு வர்த்தகம் முடிவடைந்தபோது ஹீரோ மோட்டோகார்ப் நிறுவன பங்கின் விலை முந்தைய வர்த்தக தினத்தை காட்டிலும் 0.66 சதவீதம் சரிந்து ரூ.2,837.45ஆக குறைந்தது.

ஹீரோ மோட்டோகார்ப் லாபம் ரூ.865 கோடி.. பங்கு ஒன்றுக்கு மொத்தம் ரூ.35 டிவிடெண்ட் பரிந்துரை
ஹீரோ 10 கோடி வாகனங்கள் உற்பத்தி

ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் இயக்குனர்கள் குழு 2020-21-ம் நிதியாண்டுக்கு தனது பங்குதாரர்களுக்கு இறுதி டிவிடெண்டாக பங்கு ஒன்றுக்கு ரூ.25ம், சிறப்பு டிவிடெண்டாக ரூ.10-ம் வழங்க பரிந்துரை செய்துள்ளது. 10 கோடி இருசக்கர வாகனங்கள் உற்பத்தி என்ற வரலாற்று மைல்கல்லை எட்டியதை குறிக்கும் வகையில் சிறப்பு டிவிடெண்ட் அறிவிக்கப்பட்டுள்ளது.