ஹீரோ மோட்டோகார்ப் லாபம் ரூ.794 கோடி.... 3 மாதங்களில் 14.38 லட்சம் வாகனங்கள் விற்பனை

 
ஹீரோ மோட்டோகார்ப்

ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் 2021 செப்டம்பர் காலாண்டில் தனிப்பட்ட முறையில் நிகர லாபமாக ரூ.794 கோடி ஈட்டியுள்ளது. 

நாட்டின் மிகப்பெரிய இரு சக்கர வாகன தயாரிப்பு நிறுவனமான ஹீரோ மோட்டோகார்ப் தனது கடந்த செப்டம்பர் காலாண்டு நிதி முடிவுகளை வெளியிட்டுள்ளது. ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் 2021 செப்டம்பர் காலாண்டில் தனிப்பட்ட முறையில் நிகர லாபமாக ரூ.794 கோடி ஈட்டியுள்ளது. இது சென்ற ஆண்டின் இதே காலாண்டைக் காட்டிலும் 17 சதவீதம் குறைவாகும். இந்நிறுவனம் 2020 செப்டம்பர் காலாண்டில் தனிப்பட்ட முறையில் நிகர லாபமாக ரூ.953 கோடி ஈட்டியிருந்தது.
ஹீரோ மோட்டோகார்ப்

2021 செப்டம்பர் காலாண்டில் ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் தனிப்பட்ட வருவாய் ரூ.8,453.4 கோடியாக உள்ளது. இது 2020 செப்டம்பர் காலாண்டைக் காட்டிலும் 10 சதவீதம் குறைவாகும். இந்நிறுவனம் 2020 செப்டம்பர் காலாண்டில் தனிப்பட்ட வருவாயாக ரூ.9,367 கோடி ஈட்டியிருந்தது. 2021 ஜூன் காலாண்டில் ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் மொத்தம் 14.38 லட்சம் மோட்டார் சைக்கிள் மற்றும் ஸ்கூட்டர்களை விற்பனை செய்துள்ளது. இது சென்ற ஆண்டின் இதே காலாண்டைக் காட்டிலும் 21 சதவீதம் குறைவாகும்.

ஹீரோ மோட்டோகார்ப்

மும்பை பங்குச் சந்தையில் நேற்று பங்கு வர்த்தகம் முடிவடைந்தபோது ஹீரோ மோட்டோகார்ப் நிறுவன பங்கின் விலை முந்தைய வர்த்தக தினத்தை காட்டிலும்  0.01 சதவீதம் உயர்ந்து  ரூ.2,751.15ஆக இருந்தது. கடந்த ஒரு மாதத்தில் ஹீரோ மோட்டோகார்ப் நிறுவன பங்கின் விலை 8 சதவீதம் சரிவடைந்துள்ளது.