கிராசிம் இண்டஸ்ட்ரீஸ் லாபம் ரூ.2,032 கோடி.. வருவாய் 26 சதவீதம் வளர்ச்சி

 
கிராசிம் இண்டஸ்ட்ரீஸ்

கிராசிம் இண்டஸ்ட்ரீஸ் 2021 செப்டம்பர் காலாண்டில் ஒட்டு மொத்த அளவில் நிகர லாபமாக ரூ.2,032 கோடி ஈட்டியுள்ளது. 

ஆதித்யா பிர்லா குழுமத்தின் துணை நிறுவனமான கிராசிம் இண்டஸ்ட்ரீஸ் தனது கடந்த செப்டம்பர் காலாண்டு நிதி நிலை முடிவுகளை வெளியிட்டுள்ளது. கிராசிம் இண்டஸ்ட்ரீஸ் 2021 செப்டம்பர் காலாண்டில் ஒட்டு மொத்த அளவில் நிகர லாபமாக ரூ.2,032 கோடி ஈட்டியுள்ளது. இது சென்ற ஆண்டின் இதே காலாண்டைக் காட்டிலும் சுமார் 27 சதவீதம் அதிகமாகும்.  2020 செப்டம்பர் காலாண்டில் கிராசிம் இண்டஸ்ட்ரீஸ் ஒட்டு மொத்த அளவில் நிகர லாபமாக ரூ.1,595 கோடி ஈட்டியிருந்தது.

கிராசிம் இண்டஸ்ட்ரீஸ்

2021 செப்டம்பர் காலாண்டில் ஒட்டு மொத்த அளவில் கிராசிம் இண்டஸ்ட்ரீஸ் வருவாய் ரூ.22,564 கோடியாக உயர்ந்துள்ளது. இது சென்ற ஆண்டின் இதே காலாண்டைக் காட்டிலும் 26 சதவீதம் அதிகமாகும். உர வணிக பங்கு விற்பனை செயல்முறை இந்த நிதியாண்டின் 3வது காலாண்டுக்குள் நிறைவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்று இந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

கிராசிம் இண்டஸ்ட்ரீஸ்

மும்பை பங்குச் சந்தையில் நேற்று பங்கு வர்த்தகம் முடிவடைந்தபோது கிராசிம் இண்டஸ்ட்ரீஸ் நிறுவன பங்கின் விலை முந்தைய வர்த்தக தினத்தை காட்டிலும்  1.19 சதவீதம் உயர்ந்து ரூ.1,766.85ஆக இருந்தது.