சொத்து மதிப்பில் அம்பானியை நெருங்கும் கவுதம் அதானி.. அடுத்த சில தினங்களில் அம்பானியை விஞ்ச வாய்ப்பு

 
கவுதம் அதானி

நிகர சொத்து மதிப்பில் முகேஷ் அம்பானியை தொட்டு விடும் தூரத்தில் கவுதம் அதானி உள்ளதாக புளூம்பெர்க் பில்லியனர்ஸ் இன்டெக்ஸ் தெரிவித்துள்ளது.

இந்தியாவின் மெகா கோடீஸ்வரர் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தலைவர் முகேஷ் அம்பானி. இவருக்கு அடுத்த இடத்தில் அதானி குழுமத்தின் தலைவர் கவுதம் அதானி உள்ளார். தற்போது முகேஷ் அம்பானி நிகர சொத்து மதிப்பை தொட்டு விடும் தூரத்தில் கவுதம் அதானியின் சொத்து மதிப்பு உயர்ந்து விட்டதாக புளூம்பெர்க் பில்லியனர்ஸ் இன்டெக்ஸ் தெரிவித்துள்ளது.

முகேஷ் அம்பானி

புளூம்பெர்க் பில்லியனர்ஸ் இன்டெக்ஸ்படி, கவுதம் அதானியின் சொத்து மதிப்பு 8,910 கோடி டாலராக (ரூ.6.68 லட்சம் கோடி) (நேற்று காலை நிலவரப்படி) உள்ளது. இது முகேஷ் அம்பானியின் நிகர சொத்து மதிப்பை காட்டிலும் 60 கோடி டாலர் மட்டுமே குறைவாகும். முகேஷ் அம்பானியின் நிகர சொத்து மதிப்பு 8,970 கோடி டாலராக (ரூ.6.72 லட்சம் கோடி டாலர்) உள்ளது. கடந்த புதன்கிழமையன்று முகேஷ் அம்பானியின் சொத்து மதிப்பு 132 கோடி டாலர் குறைந்தது. ஆனால் கவுதம் அதானியின் நிகர சொத்து மதிப்பு 37.50 கோடி டாலர் உயர்ந்தது.

முகேஷ் அம்பானி

அதேசமயம் நேற்று மதியம் 12.15 மணி அளவில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவன பங்கின் விலை 5 சதவீதத்துக்கு மேல் உயர்ந்து இருந்தது. அதேசமயம் அதானி நிறுவன பங்குகளின் விலை இறங்குமுகத்தில் இருந்தது. இருப்பினும், அடுத்த சில தினங்களில் முகேஷ் அம்பானியின் நிகர சொத்து மதிப்பை கவுதம் அதானி தாண்ட வாய்ப்புள்ளது, அதேசமயம் அது வரும் நாட்களில் அதானி குழும நிறுவனங்களின் பங்குகளின் செயல்பாட்டை (விலை ஏற்ற இறக்கம்) பொறுத்தே அமையும்.