பஜாஜ் எலக்ட்ரிக்கல்ஸ் லாபம் ரூ.63 கோடி... செலவினம் 8 சதவீதம் உயர்வு..

 
பஜாஜ் எலக்ட்ரிக்கல்ஸ்

பஜாஜ் எலக்ட்ரிக்கல்ஸ் நிறுவனம் 2021 செப்டம்பர் காலாண்டில் ஒட்டு மொத்த அளவில் நிகர லாபமாக ரூ.62.55 கோடி ஈட்டியுள்ளது.  

பஜாஜ் எலக்ட்ரிக்கல்ஸ் நிறுவனம் தனது கடந்த செப்டம்பர் காலாண்டு நிதி நிலை முடிவுகளை வெளியிட்டுள்ளது. பஜாஜ் எலக்ட்ரிக்கல்ஸ் நிறுவனம் 2021 செப்டம்பர் காலாண்டில் ஒட்டு மொத்த அளவில் நிகர லாபமாக ரூ.62.55 கோடி ஈட்டியுள்ளது. இது சென்ற ஆண்டின் இதே காலாண்டைக் காட்டிலும் 17.77 சதவீதம் அதிகமாகும். 2020 செப்டம்பர் காலாண்டில் பஜாஜ் எலக்ட்ரிக்கல்ஸ் நிறுவனம் ஒட்டு மொத்த அளவில் நிகர லாபமாக ரூ.53.11 கோடி ஈட்டியிருந்தது.

பஜாஜ் எலக்ட்ரிக்கல்ஸ்

2021 செப்டம்பர் காலாண்டில் பஜாஜ் எலக்ட்ரிக்கல்ஸ் நிறுவனம் செயல்பாட்டு வாயிலான மொத்த வருவாயாக ரூ.1,302.02 கோடி ஈட்டியுள்ளது. இது 2020 செப்டம்பர் காலாண்டைக் காட்டிலும் 6.92 சதவீதம் அதிகமாகும். அந்த காலாண்டில் பஜாஜ் எலக்ட்ரிக்கல்ஸ் நிறுவனம் செயல்பாட்டு வாயிலான மொத்த வருவாயாக ரூ.1,217.71 கோடி ஈட்டியிருந்தது. 2021 செப்டம்பர் காலாண்டில் பஜாஜ் எலக்ட்ரிக்கல்ஸ் நிறுவனத்தின் மொத்த செலவினம் 7.8 சதவீதம் உயர்ந்து ரூ.1,234.94 கோடியாக உயர்ந்துள்ளது.

பஜாஜ் எலக்ட்ரிக்கல்ஸ்

கடந்த செப்டம்பர் காலாண்டு இறுதி நிலவரப்படி, பஜாஜ் எலக்ட்ரிக்கல்ஸ் நிறுவனத்தின் நிகர கடன் ரூ.237 கோடியாக உள்ளது. மும்பை பங்குச் சந்தையில் கடந்த வியாழக்கிழமையன்று பஜாஜ் எலக்ட்ரிக்கல்ஸ் நிறுவன பங்கின் விலை முந்தைய வர்த்தக தினத்தை காட்டிலும் 4.09 சதவீதம் குறைந்து ரூ.1,071.70ஆக இருந்தது.