வருவாய் அதிகரித்தும் பலன் இல்லை.. ரூ.186 கோடி நஷ்டத்தை சுமோட்டோ

 
சுமோட்டோ

சுமோட்டோ நிறுவனம் 2022 ஜூன் காலாண்டில் ஒட்டு மொத்த அளவில் ரூ.186 கோடியை நிகர இழப்பாக சந்தித்துள்ளது.

ஆன்லைன் உணவு டெலிவரி நிறுவனமான சுமோட்டோ தனது கடந்த ஜூன் காலாண்டு நிதி நிலை முடிவுகளை வெளியிட்டுள்ளது. சுமோட்டோ நிறுவனம் 2022 ஜூன் காலாண்டில் ஒட்டு மொத்த அளவில் ரூ.186 கோடியை நிகர இழப்பாக சந்தித்துள்ளது. இருப்பினும் இது சென்ற ஆண்டின் இதே காலாண்டைக் காட்டிலும் குறைவாகும். 2021 ஜூன் காலாண்டில் சுமோட்டோ நிறுவனத்துக்கு ஒட்டு மொத்த அளவில் ரூ.360.70 கோடி நிகர இழப்பு ஏற்பட்டு இருந்தது.

சுமோட்டோ

2022 ஜூன் காலாண்டில் சுமோட்டோ நிறுவனம் ஒட்டு மொத்த அளவில் செயல்பாட்டு வாயிலான வருவாயாக ரூ.1,413.90 கோடி ஈட்டியுள்ளது. இது 2021 ஜூன் காலாண்டைக் காட்டிலும் 67.44 சதவீதம் அதிகமாகும். அந்த காலாண்டில் சுமோட்டோ நிறுவனம் ஒட்டுமொத்த அளவில் செயல்பாட்டு வாயிலான வருவாயாக ரூ.844.40 கோடி ஈட்டியிருந்தது.

சுமோட்டோ

மும்பை பங்குச் சந்தையில் கடந்த வெள்ளிக்கிழமையன்று பங்கு வர்த்தகம் முடிவடைந்தபோது, சுமோட்டோ நிறுவன பங்கின் விலை முந்தைய வர்த்தக தினத்தை காட்டிலும் 5.63 சதவீதம் குறைந்து ரூ.54.50ஆக இருந்தது.