விப்ரோ வருவாய் 28 சதவீதம் வளர்ச்சி.. லாபம் ரூ.3,087 கோடி..

 
லாபம் ரூ.2,463 கோடி! பங்கு ஒன்றுக்கு இடைக்கால டிவிடெண்ட் ரூ.1….விப்ரோ அறிவிப்பு…..

விப்ரோ நிறுவனம் 2022 மார்ச் காலாண்டில் ஒட்டு மொத்த அளவில் நிகர லாபமாக ரூ.3,087.3 கோடி ஈட்டியுள்ளது.

நாட்டின் 4வது பெரிய சாப்ட்வேர் நிறுவனமான விப்ரோ தனது கடந்த மார்ச் காலாண்டு நிதி நிலை முடிவுகளை வெளியிட்டுள்ளது. விப்ரோ நிறுவனம் 2022 மார்ச் காலாண்டில் ஒட்டு மொத்த அளவில் நிகர லாபமாக ரூ.3,087.3 கோடி ஈட்டியுள்ளது. இது சென்ற ஆண்டின் இதே காலாண்டைக் காட்டிலும் 3.87 சதவீதம் அதிகமாகும். 2021 மார்ச் காலாண்டில் விப்ரோ நிறுவனம் ஒட்டு மொத்த அளவில் நிகர லாபமாக ரூ.2,972.3 கோடி ஈட்டியிருந்தது.

விப்ரோ

2022 மார்ச் காலாண்டில் ரூபாய் மதிப்பு அடிப்படையில்  விப்ரோ நிறுவனத்தின் செயல்பாட்டு வாயிலான வருவாய் ரூ.20,860  கோடியாக உள்ளது. இது 2021 மார்ச் காலாண்டைக் காட்டிலும் 28.40 சதவீதம் அதிகமாகும். அந்த காலாண்டில் விப்ரோ நிறுவனம் செயல்பாட்டு வாயிலான வருவாயாக ரூ.16,245.4  கோடி ஈட்டியிருந்தது. டாலர் மதிப்பு அடிப்படையில், விப்ரோ நிறுவனத்தின் செயல்பாட்டு வாயிலான வருவாய் 26.4 சதவீதம் உயர்ந்து  272.17 கோடி டாலராக இருந்தது.

விப்ரோ

மும்பை பங்குச் சந்தையில் கடந்த வெள்ளிக்கிழமையன்று பங்கு வர்த்தகம் நிறைவடைந்தபோது, விப்ரோ நிறுவன பங்கின் விலை முந்தைய வர்த்தக தினத்தை காட்டிலும் 2.59 சதவீதம் குறைந்து ரூ.509.00ஆக இருந்தது.