ரேமண்ட் வருவாய் 2 மடங்கு வளர்ச்சி.. லாபம் ரூ.82 கோடி..

 
ரேமண்ட்

ரேமண்ட் நிறுவனம் 2022 ஜூன் காலாண்டில் ஒட்டு மொத்த அளவில் நிகர லாபமாக ரூ.81.93 கோடி ஈட்டியுள்ளது.

ஜவுளி உள்பட பல்வேறு  வர்த்தகத்தில் ஈடுபட்டு வரும் ரேமண்ட் நிறுவனம் தனது கடந்த ஜூன் காலாண்டு நிதி நிலை முடிவுகளை அண்மையில் வெளியிட்டுள்ளது. ரேமண்ட் நிறுவனம் 2022 ஜூன் காலாண்டில் ஒட்டு மொத்த அளவில் நிகர லாபமாக ரூ.81.93 கோடி ஈட்டியுள்ளது. 2021 ஜூன் காலாண்டில் ரேமண்ட் நிறுவனத்துக்கு ஒட்டு மொத்த அளவில் ரூ.157.10  கோடி நிகர இழப்பு ஏற்பட்டு இருந்தது.

ரேமண்ட்

2022 ஜூன் காலாண்டில் ரேமண்ட் நிறுவனம் செயல்பாட்டு வாயிலான வருவாயாக ரூ.1,728.14  கோடி ஈட்டியிருந்தது. இது சென்ற ஆண்டின் இதே காலாண்டைக் காட்டிலும் 2 மடங்குக்கும் அதிகமாகும். 2021 ஜூன் காலாண்டில் ரேமண்ட் நிறுவனம்  செயல்பாட்டு வாயிலான வருவாயாக ரூ.825.70 கோடி ஈட்டியிருந்தது. 2022 ஜூன் காலாண்டில் ரேமண்ட் நிறுவனத்தின் மொத்த செலவினம் 68.59 சதவீதம் உயர்ந்து ரூ.1,637.19 கோடியாக உயர்ந்துள்ளது.

ரேமண்ட்

மும்பை பங்குச் சந்தையில் நேற்று பங்கு வர்த்தகம் முடிவடைந்தபோது, ரேமண்ட் நிறுவன பங்கின் விலை முந்தைய வர்த்தக தினத்தை காட்டிலும் 2.07 சதவீதம் குறைந்து ரூ.1,013.40ஆக இருந்தது.