என்.டி.டி.வி. லாபம் ரூ.26 கோடி... வருவாய் 27 சதவீதம் வளர்ச்சி..

 
என்.டி.டி.வி.

என்.டி.டி.வி. நிறுவனம் 2022 ஜூன் காலாண்டில் ஒட்டு மொத்த அளவில் நிகர லாபமாக ரூ.25.81 கோடி ஈட்டியுள்ளது. 

ஊடக நிறுவனமான நியு டெல்லி டெலிவிஷன் லிமிடெட் (என்.டி.டி.வி.)  தனது கடந்த ஜூன் காலாண்டு நிதி நிலை முடிவுகளை வெளியிட்டுள்ளது. என்.டி.டி.வி. நிறுவனம் 2022 ஜூன் காலாண்டில் ஒட்டு மொத்த அளவில் நிகர லாபமாக ரூ.25.81 கோடி ஈட்டியுள்ளது. இது சென்ற ஆண்டின் இதே காலாண்டைக் காட்டிலும் 55.85 சதவீதம் அதிகமாகும். என்.டி.டி.வி. நிறுவனம் 2021 ஜூன் காலாண்டில் ஒட்டு மொத்த அளவில் நிகர லாபமாக ரூ.16.56  கோடி ஈட்டியிருந்தது.

என்.டி.டி.வி.

2022 ஜூன் காலாண்டில் என்.டி.டி.வி. நிறுவனம் செயல்பாட்டு வாயிலான வருவாயாக ரூ.107.74 கோடி ஈட்டியுள்ளது. இது 2021 ஜூன் காலாண்டைக் காட்டிலும் 26.72 சதவீதம் அதிகமாகும். அந்த காலாண்டில் என்.டி.டி.வி. நிறுவனம்  செயல்பாட்டு வாயிலான வருவாயாக ரூ.85.02 கோடி ஈட்டியிருந்தது. 2022 ஜூன் காலாண்டில் என்.டி.டி.வி. நிறுவனத்தின் மொத்த செலவினம் 6.94 சதவீதம் அதிகரித்து ரூ.83.33 கோடியாக அதிகரித்துள்ளது.

என்.டி.டி.வி., கவுதம் அதானி

கவுதம் அதானி தலைமையிலான அதானி குழுமம் அண்மையில் என்.டி.டி.வி.யின் 29.18 சதவீத பங்குகளை வாங்கியது குறிப்பிடத்தக்கது. மும்பை பங்குச் சந்தையில் நேற்று பங்கு வர்த்தகம் முடிவடைந்தபோது, என்.டி.டி.வி. நிறுவன பங்கின் விலை முந்தைய வர்த்தக தினத்தை காட்டிலும் 0.08 சதவீதம் உயர்ந்து ரூ.440.95ஆக இருந்தது.