மாருதி சுசுகி இந்தியா லாபம் ரூ.2,392 கோடி... 3 மாதத்தில் 4.65 லட்சம் வாகனங்கள் விற்பனை..

 
மீண்டும் ஒரே மாதத்தில் 1 லட்சம் கார்களை விற்பனை விற்பனை செய்த மாருதி சுசுகி இந்தியா..

மாருதி சுசுகி இந்தியா 2022 டிசம்பர் காலாண்டில் ஒட்டு மொத்த அளவில் நிகர லாபமாக ரூ.2,391.5 கோடி ஈட்டியுள்ளது. 

நாட்டின் மிகப்பெரிய கார் தயாரிப்பு நிறுவனமான மாருதி சுசுகி இந்தியா தனது கடந்த டிசம்பர் காலாண்டு நிதி நிலை முடிவுகளை வெளியிட்டுள்ளது. மாருதி சுசுகி இந்தியா 2022 டிசம்பர் காலாண்டில் ஒட்டு மொத்த அளவில் நிகர லாபமாக ரூ.2,391.5 கோடி ஈட்டியுள்ளது. இது 2021 டிசம்பர் காலாண்டைக் காட்டிலும் 129.55 சதவீதம் அதிகமாகும். அந்த காலாண்டில் மாருதி சுசுகி இந்தியா நிறுவனம் ஒட்டு மொத்த அளவில் நிகர லாபமாக ரூ.1,041.8 கோடி ஈட்டியிருந்தது.

மாருதி சுசுகி கார் மாடல்கள்

2022 டிசம்பர் காலாண்டில் மாருதி சுசுகி இந்தியா நிறுவனம்  செயல்பாட்டு வாயிலான வருவாயாக ரூ.29,057.5 கோடி ஈட்டியுள்ளது. இது 2021 டிசம்பர் காலாண்டைக் காட்டிலும் 24.96 சதவீதம் அதிகமாகும். அந்த காலாண்டில் மாருதி சுசுகி இந்தியா நிறுவனம் செயல்பாட்டு வாயிலான வருவாயாக ரூ.23,253.3 கோடி ஈட்டியிருந்தது. 2022 டிசம்பர் காலாண்டில் மாருதி சுசுகி இந்தியா நிறுவனம் மொத்தம் 4.65 லட்சம் வாகனங்களை விற்பனை செய்துள்ளது. இது 2021 டிசம்பர் காலாண்டைக் காட்டிலும் 8.2 சதவீதம்  அதிகமாகும்.

மாருதி சுசுகி கார் மாடல்கள்

எலக்ட்ரானிக் உதிரிபாகங்கள் பற்றாக்குறை காரணமாக 2022 செப்டம்பர் காலாண்டில் சுமார் 46 ஆயிரம் வாகனங்களின் உற்பத்தி பாதித்தது என்று மாருதி சுசுகி இந்தியா நிறுவனம் தெரிவித்துள்ளது. மும்பை பங்குச் சந்தையில் நேற்று பங்கு வர்த்தகம் முடிவடைந்தபோது, மாருதி சுசுகி இந்தியா நிறுவன பங்கின் விலை முந்தைய வர்த்தக தினத்தை காட்டிலும் 3.27 சதவீதம் உயர்ந்து ரூ.8,698.60ஆக இருந்தது.