ஜஸ்ட் டயல் வருவாய் 39 சதவீதம் வளர்ச்சி... லாபம் ரூ.75 கோடி..

 
ஜஸ்ட் டயல்

ஜஸ்ட் டயல் நிறுவனம் 2022 டிசம்பர் காலாண்டில் ஒட்டு மொத்த அளவில் நிகர லாபமாக ரூ.75.32 கோடி ஈட்டியுள்ளது. 

இந்தியாவின் முன்னணி உள்நாட்டு தேடல் தள நிறுவனமான ஜஸ்ட் டயல் தனது கடந்த செப்டம்பர் காலாண்டு நிதி நிலை முடிவுகளை வெளியிட்டுள்ளது. ஜஸ்ட் டயல் நிறுவனம் 2022 டிசம்பர் காலாண்டில் ஒட்டு மொத்த அளவில் நிகர லாபமாக ரூ.75.32 கோடி ஈட்டியுள்ளது. இது 2021 டிசம்பர் காலாண்டைக் காட்டிலும் மூன்று மடங்குக்கும் அதிகமாகும். அந்த காலாண்டில் ஜஸ்ட் டயல் நிறுவனம் ஒட்டு மொத்த அளவில் நிகர லாபமாக ரூ.19.39 கோடி ஈட்டியிருந்தது.

ஜஸ்ட் டயல்

2022 டிசம்பர் காலாண்டில் ஜஸ்ட் டயல் நிறுவனம் செயல்பாட்டு வாயிலான நிகர வருவாயாக ரூ.221.37 கோடி ஈட்டியுள்ளது. இது 2021 டிசம்பர் காலாண்டைக் காட்டிலும் 39.32 சதவீதம் அதிகமாகும். அந்த காலாண்டில் ஜஸ்ட் டயல் நிறுவனம் செயல்பாட்டு வாயிலான நிகர வருவாயாக ரூ.158.89 கோடி ஈட்டியிருந்தது. 2022 டிசம்பர் காலாண்டில் ஜஸ்ட் டயல் நிறுவனத்தின் மொத்த செலவினம் 25.67 சதவீதம் உயர்ந்து ரூ.204.92 கோடியாக அதிகரித்துள்ளது.

ஜஸ்ட் டயல்

ஜஸ்ட் டயல் நிறுவனத்தின் இயக்குனர்கள் குழு, அன்ஷுமன் தாக்கூர் மற்றும் தினேஷ் தலுஜா ஆகியோரை கூடுதல் இயக்குநர்களாக நியமனம் செய்துள்ளது. மும்பை பங்குச் சந்தையில் நேற்று பங்கு வர்த்தகம் முடிவடைந்த்போது, ஜஸ்ட் டயல் நிறுவனத்தின் பங்கின் விலை முந்தைய வர்த்தக தினத்தை காட்டிலும் 10 சதவீதம் உயர்ந்து ரூ.643.65ஆக இருந்தது.