தாபர் இந்தியா லாபம் ரூ.491 கோடி... வருவாய் 6 சதவீதம் வளர்ச்சி..

 
செலவுகள் எகிறிய போதிலும், லாபத்தை குவித்த தாபர் இந்தியா……..

தாபர் இந்தியா நிறுவனம் 2022 செப்டம்பர் காலாண்டில் ஒட்டு மொத்த அளவில் நிகர லாபமாக ரூ.490.86 கோடி ஈட்டியுள்ளது.

உள்நாட்டை சேர்ந்த எப்.எம்.சி.ஜி. நிறுவனமான தாபர் இந்தியா தனது கடந்த செப்டம்பர் காலாண்டு நிதி நிலை முடிவுகளை வெளியிட்டுள்ளது. தாபர் இந்தியா நிறுவனம் 2022 செப்டம்பர் காலாண்டில் ஒட்டு மொத்த அளவில் நிகர லாபமாக ரூ.490.86 கோடி ஈட்டியுள்ளது. இது சென்ற ஆண்டின் இதே காலாண்டைக் காட்டிலும் 2.85 சதவீதம் குறைவாகும். 2021 செப்டம்பர் காலாண்டில் தாபர் இந்தியா நிறுவனம் ஒட்டு மொத்த அளவில் நிகர லாபமாக ரூ.505.31 கோடி ஈட்டியிருந்தது.

லாக்டவுன் பார்த்த பார்வை….தாபர் இந்தியா லாபம் ரூ.319 கோடியாக குறைந்தது… டிவிடெண்டுக்கு பரிந்துரை

2022 செப்டம்பர் காலாண்டில் தாபர் இந்தியா நிறுவனம் செயல்பாட்டு வாயிலான வருவாயாக ரூ.2,986.49 கோடி ஈட்டியுள்ளது. இது 2021 செப்டம்பர் காலாண்டைக் காட்டிலும் 6 சதவீதம் அதிகமாகும். அந்த காலாண்டில் தாபர் இந்தியா நிறுவனம் செயல்பாட்டு வாயிலான வருவாயாக ரூ.2,817.58 கோடி ஈட்டியிருந்தது. 2022 செப்டம்பர் காலாண்டில் தாபர் இந்தியா நிறுவனத்தின் மொத்த செலவினம் 8.94 சதவீதம் அதிகரித்து ரூ.2,471.28 கோடியாக உயர்ந்துள்ளது.

லாக்டவுன் பார்த்த பார்வை….தாபர் இந்தியா லாபம் ரூ.319 கோடியாக குறைந்தது… டிவிடெண்டுக்கு பரிந்துரை

மும்பை பங்குச் சந்தையில் நேற்று பங்கு வர்த்தகம் முடிவடைந்தபோது, தாபர் இந்தியா நிறுவன பங்கின் விலை முந்தைய வர்த்தக தினத்தை காட்டிலும் 3.24 சதவீதம் உயர்ந்து ரூ.549.35ஆக இருந்தது.