வர்த்தக துளிகள்.. உலகின் பணக்கார நடிகர்கள் பட்டியலில் ஷாரூக்கான்.. சொத்து மதிப்பு ரூ.6,306 கோடி..

 
ஷாருக்கான் குரலில் உருவாகும் ஐபிஎல் பாடல்

வேர்ல்டு ஆஃப் ஸ்டாட்டிஸ்டிக்ஸ் அண்மையில்  உலக பணக்கார நடிகர்கள் பட்டியலை டிவிட்டரில் வெளியிட்டது. உலக பணக்கார நடிகர்கள் பட்டியலில், பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாரூக்கான் 4வது இடத்தை பிடித்துள்ளார். ஷாருக்கானின் சொத்து மதிப்பு ரூ.6,306 கோடி என மதிப்பிடப்பட்டுள்ளது. ஷாரூக்கானின் சராசரி ஆண்டு வருமானம் தோராயமாக ரூ.313 கோடி என்று போர்ப்ஸ் தரவு குறிப்பிடுகிறது.

வேலைவாய்ப்பு

நாட்டின் மிகப்பெரிய ஐ.டி. நிறுவனமான டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் எதிர்வரும் 2023-24ம் நிதியாண்டில் 1.25 லட்சம் முதல் 1.50 லட்சம் பணியாளர்களை பணியமர்த்த உள்ளதாக அறிவித்துள்ளது. 2022 டிசம்பர் காலாண்டு இறுதி நிலவரப்படி, டாடா கன்சல்டன்சி சர்வீசஸ்  நிறுவனத்தில் மொத்தம் 6.13 லட்சம் பணியாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். 2022 டிசம்பர் காலாண்டில் மொத்த பணியாளர்களின் எண்ணிக்கை 2,197 குறைந்துள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்து இருந்தது குறி்ப்பிடத்தக்கது.

பெட்ரோல் பம்ப்

பெட்ரோல், டீசல் மற்றும் கியாஸ் உள்பட இந்தியாவின் எரிபொருள் தேவை கடந்த டிசம்பர் மாதத்தில் 3.1 சதவீதம் அதிகரித்து 1.96 கோடி டன்னாக உயர்ந்துள்ளது. கடந்த மாதத்தில் பெட்ரோல் விற்பனை 5.9 சதவீதம் அதிகரித்து 29.8 லட்சம் டன்னாகவும், சமையல் கியாஸ் விற்பனை 3.9 சதவீதம் உயர்ந்து 25.8 லட்சம் டன்னாகவும் உயர்ந்துள்ளது என பெட்ரோலிய அமைச்சகத்தின் பெட்ரோலியம் திட்டமிடல் மற்றும் பகுப்பாய்வு பிரிவின் தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கார்கள்

இந்தியர்களின் சராசரி கார் வாங்கும் பட்ஜெட் 2022ம் ஆண்டில் 30 சதவீதம் அதிகரித்துள்ளதாக புதிய அறிக்கை ஒன்று தெரிவித்துள்ளது. கார்ஸ்24 நிறுவனத்தின் தி மைலேஜ் ரிப்போர்ட்-படி, இந்தியர்கள் சராசரியாக கார் வாங்குவது ரூ.4.5 லட்சத்தில் இருந்து ரூ.6 லட்சமாக அதிகரித்துள்ளது. மேலும் கார் வாங்கும்போது மைலேஜை முக்கிய அளவுகோலமாக இந்தியர்கள் பார்க்கின்றனர். மேலும் காரை பைனான்ஸில் வாங்க அதிகமான இந்தியர்கள் விரும்புகின்றனர்.