வர்த்தக துளிகள்... ஆன்லைன் மோசடியில் 25 லட்சம் கோடி டாலரை இழந்த சர்வதேச கிரிக்கெட் கவுன்சில்..

 
ஐ.சி.சி.

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) கடந்த ஆண்டு (2022) ஆன்லைன் மோசடியில் கிட்டத்தட்ட 25 லட்சம் டாலர்களை இழந்துள்ளதாக கூறப்படுகிறது. கடந்த ஆண்டு அமெரிக்காவிலிருந்து இந்த இந்த மோசடி சம்பவம் நடந்தது கூறப்படுகிறது.  ஒரு முறை அல்ல, இரு முறை அல்ல, நான்கு முறை மோசடி செய்பவரால்  ஐ.சி.சி. ஏமாற்றப்பட்டது. இதில் ஆச்சரியமாக செய்தி என்னவென்றால், ஐ.சி.சி.யின் துபாய் அலுவலகத்தில் உள்ள அதிகாரிகளுக்கு கடந்த வியாழக்கிழமை வரை தாங்கள் ஏமாற்றப்பட்டதற்கான துப்பு இல்லை என தகவல்.

பதான்
பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாரூக்கான், தீபிகா படுகோன் மற்றும் ஜான் ஆபிரகாம் ஆகியோர் நடித்த பதான் திரைப்படம் இம்மாதம் 25ம் தேதி வெளியாகிறது. இந்த திரைப்படத்துக்கான முன்பதிவு நேற்று தொடங்கியது. ரசிகர்கள் ஆர்வமாக டிக்கெட் முன்பதிவு செய்து வருகின்றனர். டெல்லியில் சில குறிப்பிட்ட மல்டிபிளக்ஸ்களில்  மாலை காட்சிகளுக்கான டிக்கெட் ரூ.2,100 (ஒன்றுக்கு) விற்கப்படுவதாக தகவல். அதேசமயம் காலை நேர காட்சிக்கான டிக்கெட்டுகள் சில திரையரங்குகளில் ரூ.1,000க்கு (ஒன்றுக்கு) விற்பனை செய்யப்படுவதா தகவல்.

டிராய்

தொலைத்தொடர்பு நெட்வொர்க்குகளில் அழைப்பாளர் ஐ.டி.யை கட்டாயமாக்குவது தொடர்பான் ஆலோசனை அறிக்கை குறித்த தொழில்துறை கருத்துக்களை இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் வெளியிட்டுள்ளது.  வாடிக்கையாளர்களின் தனியுரிமை தவிர்த்து தொழில்நுட்ப மற்றும் செலவு திறன் சிக்கல்களை மேற்கோள் காட்டி அழைப்பாளர் ஐ.டி.யை கட்டாயம் அமல்படுத்துவதற்கு தொலைத்தொடர்பு சேவை வழங்கும் நிறுவனங்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. அதேசமயம் அழைப்பாளர் ஐ.டி. கட்டாயம் அமல்படுத்துவதற்கு நுகர்வோர் பாதுகாப்பு குழுக்கள், இணைய சேவை வழங்குநர்கள் சங்கம் மற்றும் வீனோ கம்யூனிகேஷன்ஸ் ஆகியவை ஆதரவு தெரிவித்துள்ளன.

அன்னிய செலாவணி

இந்தியாவின் அன்னிய செலாவணி கையிருப்பு ஜனவரி 13ம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில்  1,042  கோடி டாலர் உயர்ந்து 5 மாதங்களில் இல்லாத அளவுக்கு 57,200 கோடி டாலராக அதிகரித்துள்ளது என இந்திய ரிசர்ச் வங்கி தெரிவித்துள்ளது. கடந்த ஜனவரி 6ம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் அன்னிய செலாவணி கையிருப்பு 56,158  கோடி டாலராக இருந்தது. இதற்கு முன் அதிகபட்சமாக 2022 ஆகஸ்ட் 5ம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் அன்னிய செலாவணி கையிருப்பு 57,298 டாலராக இருந்தது. 2021 அக்டோபரில் அன்னிய செலாவணி கையிருப்பு இதுவரை இல்லாத அளவுக்கு அதிகபட்சமாக 64,500 கோடி டாலர் என்ற அளவில் இருந்தது.