வர்த்தக துளிகள்.. பாதி விலைக்கு வரும் தேயிலை தோட்டங்கள்

 
தேயிலை தோட்டம்

டார்ஜிலிங்கின் சுமார் 35 முதல் 40 தேயிலை தோட்டங்கள் கிட்டத்தட்ட பாதி விலைக்கு வந்துள்ளன. ஏனெனில் ஐரோப்பா மற்றும் ஜப்பானில் இருந்து டார்ஜிலிங் தேயிலை நல்ல அளவில் வாங்கும் சர்வதேச வாங்குபவர்கள் இல்லாததால் தேயிலை தோட்டக்காரர்களால் செயல்பாடுகளை சீராக நடத்த முடியவில்லை மற்றும் உற்பத்தி செலவினமும் அதிகரித்துள்ளதே இதற்கு காரணம் என தகவல்.

நேரடி வரி வசூல்

தனி மனிதர்களோ அல்லது நிறுவனங்களோ அரசுக்கு நேரடியாக செலுத்துகின்ற பெருநிறுவன வருமான வரி, தனிநபர் வருமான வரி, சொத்து வரி போன்றவை நேரடி வரிகள் ஆகும். இந்த நிதியாண்டில் கடந்த சனிக்கிழமை வரையிலான காலத்தில் (ஏப்ரல் 1 முதல் செப்டம்பர் 17 வரை)  நிகர  நேரடி வரி வசூல் ரூ.8.36 லட்சம் கோடியாக உள்ளது. இது சென்ற நிதியாண்டின் இதே காலத்தை காட்டிலும் 30 சதவீதம் அதிகமாகும் என்று மத்திய நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது.

அடுத்தடுத்து தீ பிடிக்கும் எலக்ட்ரிக் வாகனங்கள் – முக்கிய அறிவிப்பு வெளியிட்ட OLA நிறுவனம் ..

ராஜஸ்தானில் மின்சார வாகனங்கள் விற்பனை ஆண்டுக்கு ஆண்டு வளர்ச்சி கண்டு வருகிறது. இந்த ஆண்டில் செப்டம்பர் முதல் வாரம் வரை மொத்தம் 42,900 மின்சார வாகனங்கள் (மோட்டார் சைக்கிள் மற்றும் ஸ்கூட்டர், மூன்று சக்கர வாகனங்கள் , இலகுரக வாகனங்கள்) விற்பனையாகி உள்ளது. ராஜஸ்தானில் கடந்த 3 ஆண்டுகளில் மின்சார வாகனங்கள் விற்பனை 6 மடங்கு அதிகரித்துள்ளது  என அம்மாநில போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது.

அன்னிய முதலீடு

இந்தியாவின் அன்னிய செலாவணி கையிருப்பு செப்டம்பர் 9ம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் 223 கோடி டாலர் குறைந்து 55,087 கோடி டாலராக குறைந்துள்ளது என இந்திய ரிசர்ச் வங்கி தெரிவித்துள்ளது. இதில், கையிருப்பில் உள்ள  தங்கத்தின் மதிப்பு 34 கோடி டாலர் அதிகரித்து 3,864 கோடி டாலராக உயர்ந்துள்ளது.