கடந்த ஏப்ரலில் ராயல் என்பீல்டு, கியா, டி.வி.எஸ். வாகன விற்பனை அமோகம்

 
ராயல் என்பீல்டு

கடந்த ஏப்ரல் மாதத்தில் ராயல் என்பீல்டு, கியா, டி.வி.எஸ். ஆகிய நிறுவனங்களின் வாகன விற்பனை அதிகரித்துள்ளது.

எய்ஷர் மோட்டார் நிறுவனத்தின் இரு சக்கர வாகன தயாரிப்பு பிரிவு ராயல் என்பீல்டு. ராயல் என்பீல்டு நிறுவனம் கடந்த ஏப்ரல் மாதத்தில் மொத்தம் 62,155 வாகனங்களை விற்பனை செய்துள்ளது. இது 2021 ஏப்ரல் மாதத்தை காட்டிலும் 17 சதவீதம் அதிகமாகும். அந்த மாதத்தில் ராயல் என்பீல்டு நிறுவனம் 53,298 வாகனங்களை விற்பனை செய்து இருந்தது.

டி.வி.எஸ். மோட்டார் கம்பெனி

நாட்டின் முன்னணி இரு மற்றும் 3 சக்கர வாகன தயாரிப்பு நிறுவனமான டி.வி.எஸ். மோட்டார் கம்பெனி கடந்த ஏப்ரல் மாதத்தில்  மொத்தம் 2.95 லட்சம் வாகனங்களை விற்பனை செய்துள்ளது. இது 2021 ஏப்ரல் மாதத்தை காட்டிலும் 24 சதவீதம் அதிகமாகும். அந்த மாதத்தில் டி.வி.எஸ். மோட்டார் கம்பெனி மொத்தம் 2.38 லட்சம் வாகனங்களை விற்பனை செய்து இருந்தது.

கியா

கியா இந்தியா நிறுவனம் கடந்த ஏப்ரல் மாதததில் உள்நாட்டில் மொத்தம் 19,019 கார்களை விற்பனை செய்துள்ளது. இது 2021 ஏப்ரல் மாதத்தை காட்டிலும் 18 சதவீதம் அதிகமாகும். அந்த மாதத்தில் கியா இந்தியா நிறுவனம் உள்நாட்டில் 16,111 கார்களை விற்பனை செய்து இருந்தது.