வர்த்தக துளிகள்.. ஆகஸ்ட் 15ம் தேதி 5ஜி சேவையை அறிமுகப்படுத்தும் ஜியோ

 
5G  ஏலத்தில் பல லட்சம் கோடி மோசடி!!.. யாருக்காக இந்த குறைந்த விலை?? -  ஆ.ராசா குற்றச்சாட்டு..

நம் நாட்டில் 5ஜி சேவையை அறிமுகப்படுத்துவதில் தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு இடையிலான போட்டியில், ரிலையன்ஸ் ஜியோ முன்னணியில் உள்ளது. ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் வரும் 15ம் தேதியன்று 5ஜி சேவைகளை தொடங்கும் என தகவல் வெளியாகியுள்ளது. ரிலையன்ஸ் ஜியோ இன்போகாம் நிறுவனத்தின் தலைவர் ஆகாஷ் அம்பானி அண்மையில், சுதந்திர விழாவை இந்தியா முழுவதும் 5ஜி அறிமுகத்துடன் கொண்டாடுவோம் என தெரிவித்து இருந்தார்.

அமேசான்

அமேசான்  நிறுவனத்துக்கு மத்திய நுகர்வோர் பாதுகாப்பு ஆணையம் ரூ.1 லட்சம் அபராதம் விதித்துள்ளது. பரிந்துரைக்கப்பட்ட கட்டாய தரநிலைகளை மீறி உள்நாட்டு பிரஷர் குக்கர்களை தனது ஆன்லைன் வர்த்தக தளத்தில் விற்பனை செய்ய அனுமதி அளித்ததற்காக அமேசானுக்கு நுகர்வோர் பாதுகாப்பு ஆணையம் அபராதம் விதித்துள்ளது. மேலும் விற்பனை செய்த பிரஷர் குக்கர்களை திரும்ப பெற்று, அதற்கான பணத்தை வாடிக்கையாளர்களிடம் திரும்ப அளிக்கவும் உத்தரவிட்டுள்ளது.

வர்த்தக வாகனங்கள் விற்பனை

நம் நாட்டில் கடந்த ஜூலை மாதத்தில் இரு சக்கர வாகனங்கள், கார், வர்த்தக வாகனங்கள் உள்பட ஒட்டு மொத்த வாகனங்கள் விற்பனை 8 சதவீதம் குறைந்து 14.37 லட்சம் வாகனங்களாக சரிவடைந்துள்ளதாக இத்துறை அமைப்பு தெரிவித்துள்ளது. குறிப்பாக கடந்த மாதத்தில் இரு சக்கர வாகனங்கள் விற்பனை 11 சதவீதம் குறைந்து 10.1 லட்சமாக குறைந்துள்ளது. பயணிகள் வாகனங்கள் விற்பனை 5 சதவீதம் சரிந்து 2.52 லட்சம் வாகனங்களாக குறைந்துள்ளது.

ஐஸ்கிரீம் பார்லர்

 பார்லர்கள் அல்லது ஏதேனும் விற்பனை நிலையங்கள் மூலம் விற்பனை செய்யப்படும்  ஐஸ்கிரீம்களுக்கு  இன்புட் டேக்ஸ் கிரெடிட்டுடன்  18 சதவீதம் ஜி.எஸ்.டி. வரி ஈர்க்கும் என்று மத்திய மறைமுக வரிகள் மற்றும் சுங்க வாரியம் விளக்கம் தெரிவித்துள்ளது.