5 தினங்களில் முதலீட்டாளர்களுக்கு ரூ.2.16 லட்சம் கோடி லாபம்.. சென்செக்ஸ் 1,033 புள்ளிகள் உயர்ந்தது…

5 தினங்களில் முதலீட்டாளர்களுக்கு ரூ.2.16 லட்சம் கோடி லாபம்.. சென்செக்ஸ் 1,033 புள்ளிகள் உயர்ந்தது…

இந்திய பங்குச் சந்தைகளில் இந்த வாரம் பங்கு வர்த்தகம் ஒட்டு மொத்த அளவில் ஏற்றம் கண்டது. சென்செக்ஸ் 1,033 புள்ளிகள் உயர்ந்தது.

கடந்த திங்கள் மற்றும் புதன் ஆகிய தினங்களை தவிர்த்து மற்ற 3 தினங்களிலும் பங்கு வர்த்தகம் ஏற்றம் கண்டது. அமெரிக்க பெடரல் வங்கி பத்திரங்கள் வாங்குவதை குறைக்கபோவதாகவும், அடுத்த ஆண்டு முதல் வட்டி விகித்தை உயர்த்த போவதாகவும் தகவல் வெளியானது. முதலீட்டாளர்கள் பங்குகளை வாங்க குவித்தது பங்குச் சந்தைகளில் நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தின. இந்த வாரம் இந்திய பங்குச் சந்தைகளில் பங்கு வர்த்தகம் முதல் முறையாக 60 ஆயிரம் புள்ளிகளை கடந்தது குறிப்பிடத்தக்கது.

5 தினங்களில் முதலீட்டாளர்களுக்கு ரூ.2.16 லட்சம் கோடி லாபம்.. சென்செக்ஸ் 1,033 புள்ளிகள் உயர்ந்தது…
அமெரிக்க பெடரல் வங்கி

மும்பை பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனங்களின் பங்குகளின் மொத்த சந்தை மதிப்பு இன்று பங்கு வர்த்தகம் நிறைவடைந்தபோது ரூ.261.17 லட்சம் கோடியாக இருந்தது கடந்த வார வெள்ளிக்கிழமையன்று (செப்டம்பர் 17) பங்கு வர்த்தகம் நிறைவடைந்தபிறகு மும்பை பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனங்களின் பங்குகளின் மொத்த சந்தை மதிப்பு ரூ.259.01 லட்சம் கோடியாக இருந்தது. ஆக, இந்த வாரம் பங்குச் சந்தையில் முதலீட்டாளர்களுக்கு ஒட்டு மொத்த அளவில் சுமார் ரூ.2.16 லட்சம் கோடி லாபம் கிடைத்தது.

5 தினங்களில் முதலீட்டாளர்களுக்கு ரூ.2.16 லட்சம் கோடி லாபம்.. சென்செக்ஸ் 1,033 புள்ளிகள் உயர்ந்தது…
பங்கு வர்த்தகம்

நம் நாட்டு பங்குச் சந்தைகளில், இன்றுடன் முடிவடைந்த இந்த வார பங்கு வர்த்தகத்தில், ஒட்டு மொத்த அளவில் மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 1,032.58 புள்ளிகள் உயர்ந்து 60,048.47 புள்ளிகளில் நிலைகொண்டது. தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண் நிப்டி 267.05 புள்ளிகள் ஏற்றம் கண்டு 17,853.20 புள்ளிகளில் முடிவுற்றது.