இந்த வாரம் 4 தினங்கள் மட்டுமே நடந்த பங்கு வர்த்தகம்.. சென்செக்ஸ் 1,051 புள்ளிகள் வீழ்ச்சி..

 
பங்கு வர்த்தகம் வீழ்ச்சி

இந்திய பங்குச் சந்தைகளில் இந்த வாரம் 4 தினங்கள் மட்டுமே பங்கு வர்த்தகம் நடைபெற்றது. சென்செக்ஸ் 1,051 புள்ளிகள் வீழ்ச்சி கண்டது.

குருநானக் ஜெயந்தியை முன்னிட்டு இன்று பங்குச் சந்தைகளுக்கு விடுமுறை. அதனால் இந்த வாரம் மொத்தம் 4 தினங்கள் மட்டுமே பங்கு வர்த்தகம் நடைபெற்றது. கடந்த திங்கட்கிழமையை தவிர்த்து நேற்று வரையிலான கடந்த 3 வர்த்தக தினங்களிலும் பங்கு வர்த்தகம் சரிவை சந்தித்தது. முதலீட்டாளர்கள் லாப நோக்கம் கருதி பங்குகளை விற்பனை செய்தது, நிதி நிலை முடிவுகள், சர்வதேச நிலவரங்கள் உள்ளிட்டவை இந்த வார பங்கு வர்த்தகத்தில் தாக்கத்தை ஏற்படுத்தின. இந்த வாரம் ஒட்டு மொத்த அளவில் பங்குச் சந்தைகளில் வர்த்தகம் படுத்தது.

பங்கு வர்த்தகம் வீழ்ச்சி
மும்பை பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனங்களின் பங்குகளின் மொத்த சந்தை மதிப்பு நேற்று வர்த்தகம் நிறைவடைந்தபோது ரூ.269.22 லட்சம் கோடியாக இருந்தது. கடந்த வார வெள்ளிக்கிழமையன்று (நவம்பர் 12) பங்கு வர்த்தகம் நிறைவடைந்தபிறகு மும்பை பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனங்களின் பங்குகளின் மொத்த சந்தை மதிப்பு ரூ.270.15 லட்சம் கோடியாக இருந்தது. ஆக, இந்த வாரம் பங்குச் சந்தையில் .முதலீட்டாளர்களுக்கு ஒட்டு மொத்த அளவில் சுமார் ரூ.93 ஆயிரம் கோடி நஷ்டம் ஏற்பட்டது.

பங்கு வர்த்தகம் வீழ்ச்சி

நம் நாட்டு பங்குச் சந்தைகளில், இன்றுடன் முடிவடைந்த இந்த வார பங்கு வர்த்தகத்தில், ஒட்டு மொத்த அளவில் மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 1,050.68 புள்ளிகள் குறைந்து 59,636.01 புள்ளிகளில் நிலைகொண்டது. தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண் நிப்டி 337.95 புள்ளிகள் சரிவு கண்டு 17,764.80 புள்ளிகளில் முடிவுற்றது.