தொடர்ந்து 2வது நாளாக சரிவை சந்தித்த பங்கு வர்த்தகம்.. சென்செக்ஸ் 314 புள்ளிகள் வீழ்ச்சி

 
பங்கு வர்த்தகம் வீழ்ச்சி

இந்திய பங்குச் சந்தைகளில் இன்று பங்கு வர்த்தகம் சரிவை சந்தித்தது. சென்செக்ஸ் 314 புள்ளிகள் குறைந்தது.

இந்திய பங்குச் சந்தைகளில் இன்று பங்கு வர்த்தகம் சரிவுடன் தொடங்கியது. இன்று வர்த்தகத்தில் ஏற்ற இறக்கம் நிலவியது. இறுதியில் பங்கு வர்த்தகம் சரிவுடன் முடிவடைந்தது. சென்செக்ஸ் கணக்கிட உதவும் 30 நிறுவன பங்குகளில், மாருதி சுசுகி மற்றும் ஏசியன் பெயிண்ட்ஸ் உள்பட மொத்தம் 10 நிறுவன பங்குகளின் விலை உயர்ந்தது. அதேவேளையில், ஆக்சிஸ் வங்கி மற்றும் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் உள்பட மொத்தம் 20 நிறுவன பங்குகளின் விலை குறைந்தது.

ஏசியன் பெயிண்ட்ஸ்

மும்பை பங்குச் சந்தையில் இன்று 1,492 நிறுவன பங்குகளின் விலை உயர்ந்தது. 1,856 நிறுவன பங்குகளின் விலை குறைந்தது. 116 நிறுவன பங்குகளின் விலையில் எந்தவித மாற்றமும் இன்றி முடிவடைந்தது. மும்பை பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனங்களின் பங்குகளின் மொத்த சந்தை மதிப்பு ரூ.271.08 லட்சம் கோடியாக உயர்ந்தது. ஆக, இன்று முதலீட்டாளர்களுக்கு பங்குச் சந்தையில் ஒட்டு மொத்த அளவில் சுமார் ரூ.1.46 லட்சம் கோடி லாபம் கிடைத்தது.

பங்கு வர்த்தகம் வீழ்ச்சி

இன்றைய வர்த்தகத்தின் முடிவில், மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 314.04 புள்ளிகள் குறைந்து 60,008.33 புள்ளிகளில் நிலைகொண்டது. தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண் நிப்டி 100.55 புள்ளிகள் சரிவு கண்டு 17,898.65 புள்ளிகளில் முடிவுற்றது.