இந்த வார பங்கு வர்த்தகத்தில் ரூ.2.23 லட்சம் கோடி லாபம் பார்த்த முதலீட்டாளர்கள்.. சென்செக்ஸ் 497 புள்ளிகள் உயர்வு

இந்த வார பங்கு வர்த்தகத்தில் ரூ.2.23 லட்சம் கோடி லாபம் பார்த்த முதலீட்டாளர்கள்.. சென்செக்ஸ் 497 புள்ளிகள் உயர்வு

இந்திய பங்குச் சந்தைகளில் இந்த வாரம் பங்கு வர்த்தகம் சிறப்பாக இருந்தது. சென்செக்ஸ் 497 புள்ளிகள் உயர்ந்தது.

இந்தியா-சீனா இடையிலான பதற்றம், நிறுவனங்களின் ஜூன் காலாண்டு நிதி முடிவுகள் திருப்திகரமாக இல்லாதது, சர்வதேச அளவில் பொருளாதார மீட்பு குறித்த கவலை போன்றவை பங்கு வர்த்தகத்தின் ஏற்றத்துக்கு முட்டுக்கட்டையாக இருந்தது. இருப்பினும், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம் தனது ரீடெயில் நிறுவனத்தின் 40 சதவீத பங்குகளை அமேசான் நிறுவனத்துக்கு விற்பனை செய்ய ஆர்வமாக இருப்பதாக தெரிவித்தது. முதலீட்டாளர்களும் பங்குகளில் அதிகளவில் ஆர்வமாக முதலீடு செய்தது போன்ற காரணங்களால் இந்த வார பங்கு வர்த்தகம் உயர்வுடன் முடிவடைந்தது.

இந்த வார பங்கு வர்த்தகத்தில் ரூ.2.23 லட்சம் கோடி லாபம் பார்த்த முதலீட்டாளர்கள்.. சென்செக்ஸ் 497 புள்ளிகள் உயர்வு
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்

கடந்த 5 வர்த்தக தினங்களில் மும்பை பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனங்களின் பங்குகளின் மொத்த சந்தை மதிப்பு ரூ.156.86 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது. கடந்த 4ம் தேதியோடு முடிவடைந்த சென்ற வார பங்கு வர்த்தகத்தின் முடிவில் இது ரூ.154.63 லட்சம் கோடியாக இருந்தது. ஆக, கடந்த 5 தினங்களில் பங்குச் சந்தை முதலீட்டாளர்களுக்கு ஒட்டு மொத்த அளவில் ரூ.2.23 லட்சம் கோடி லாபம் கிடைத்தது.

இந்த வார பங்கு வர்த்தகத்தில் ரூ.2.23 லட்சம் கோடி லாபம் பார்த்த முதலீட்டாளர்கள்.. சென்செக்ஸ் 497 புள்ளிகள் உயர்வு
மும்பை பங்குச் சந்தை

நேற்றுடன் முடிவடைந்த இந்த வார பங்கு வர்த்தகத்தில் ஒட்டு மொத்த அளவில் மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 497.37 புள்ளிகள் உயர்ந்து 38,854.55 புள்ளிகளில் முடிவுற்றது. தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண் நிப்டி 130.60 புள்ளிகள் அதிகரித்து 11,464.45 புள்ளிகளில் நிலை கொண்டது.