Home தமிழகம் ஆம்னி பேருந்துகள் எப்போது ஓடும்? அரசிடம் பேருந்துகளை ஒப்படைக்க முடிவு? : ஆம்னி பேருந்து உரிமையாளர்கள்

ஆம்னி பேருந்துகள் எப்போது ஓடும்? அரசிடம் பேருந்துகளை ஒப்படைக்க முடிவு? : ஆம்னி பேருந்து உரிமையாளர்கள்

போக்குவரத்தைப் பொறுத்தவரை இ.பாஸ் முறை ரத்து செய்யப்பட்டு வாகனங்கள் அனைத்திற்கும் வெளியூர் சென்று வர அனுமதி தரப்பட்டன பின்னர் அரசுப் பேருந்துகள் இயக்கப்பட்டன. தமிழகம் முழுவதும் தற்போது பேருந்துகள் எந்தப் பிரச்சனையும் இல்லாமல் இயங்கி வருகின்றன. ஆம்னி மற்றும் தனியார் பேருந்துகளும் 60 சதவீத பயணிகளுடன் இயக்க அனுமதியளிக்கப்பட்டது. ஆனால் தனியார் பேருந்து உரிமையாளர்கள் சில கோரிக்கைகளை முன் வைத்து பேருந்துகளை இயக்க முன்வரவில்லை. பேருந்துகள் ஓடாத மாதங்களில் கட்ட வேண்டிய சாலை வரியை ரத்து செய்ய வேண்டும். இன்சூரன்சை மேலும் ஆறு மாதங்களுக்கு நீட்டிக்க வேண்டும், 100 சதவீதம் பயணிகளை அனுமதிக்க வேண்டும் என்பது போன்ற கோரிக்கைகளை வைத்தனர்.

7-ந்தேதி முதல் ஆம்னி பஸ்களை இயக்க வாய்ப்பு இல்லை: உரிமையாளர்கள் சங்கம்  அறிவிப்பு || Omni buses will not be running from the 7th

இந்நிலையில் இதுதொடர்பாக கூட்டாக செய்தியாளர்களிடம் பேசிய ஆம்னி பேருந்து உரிமையாளர்கள், “கொரோனா பொது முடக்கம் காலத்தில் இயக்காத ஆம்னி பேருந்துகளுக்கு சாலை வரி வசூலிப்பது ஏற்புடையதல்ல. ஒரு பேருந்துக்கு 2 லட்சம் கட்ட வேண்டிய சூழல் ஏற்படும். இதனால் 4 ஆயிரம் பேருந்து வைத்திருக்கும் உரிமையாளர்கள், தொழிலாளர்கள் பாதிப்படைவர். தற்போது இது தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நடந்து வரும் நிலையில் சாலை வரியை ரத்து செய்யும் முடிவை தமிழக அரசு அறிவிக்க வேண்டும். இல்லை எனில் பேருந்துகளை அரசிடம் ஒப்படைக்கும் போராட்டம் விரைவில் அறிவிக்க வேண்டிய நிலை ஏற்படும்” எனக் கூறினர்.

மாவட்ட செய்திகள்

Most Popular

கொரோனா தொற்றுநோய் மத்தியிலும் 3 மாதத்தில் ரூ.39,510 கோடிக்கு தங்கத்தை வாங்கி குவித்த மக்கள்

கொரோனா தொற்றுநோய் மத்தியிலும் இந்தியாவில் கடந்த செப்டம்பர் காலாண்டில் ரூ.39,510 கோடிக்கு தங்கம் விற்பனையாகி உள்ளது என உலக தங்க கவுன்சில் தெரிவித்துள்ளது. மஞ்சள் உலோகமான...

கை கொடுத்த வட்டி வருவாய்… ரூ.1,683 கோடி லாபம் ஈட்டிய ஆக்சிஸ் வங்கி…

ஆக்சிஸ் வங்கி 2020 செப்டம்பர் காலாண்டில் நிகர லாபமாக ரூ.1,683 கோடி ஈட்டியுள்ளது. நாட்டின் முன்னணி தனியார் வங்கிகளில் ஒன்றான ஆக்சிஸ் வங்கி தனது செப்டம்பர்...

கொல்கத்தாவுக்கு எதிரான போட்டியில் சென்னை அணி அபார வெற்றி!

ஐபிஎல் கிரிக்கெட்டில் இன்றைய 49 ஆவது ஆட்டத்தில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், மோர்கன் தலைமையிலான கொல்கத்தா அணியும் மோதின. டாஸ் வென்ற சென்னை அணியின் கேப்டன்...
Do NOT follow this link or you will be banned from the site!