ஈரோட்டில் இரண்டு மாதங்களுக்கு பிறகு நேற்று பஸ் போக்குவரத்து தொடங்கியது குறைந்த அளவே பயணிகள் பயணம்!

 

ஈரோட்டில் இரண்டு மாதங்களுக்கு பிறகு நேற்று பஸ் போக்குவரத்து தொடங்கியது குறைந்த அளவே பயணிகள் பயணம்!


ஈரோடு, செப்.1

ஈரோட்டில் இன்று நூற்றுக்கும் மேற்பட்ட பஸ்கள் இயக்கப்பட்டன. நேற்று முதல் நாள் என்பதாலும் ஒருவித அச்சம் காரணமாகவும் குறைந்த அளவிலேயே பயணிகள் பயணம் செய்தனர்.

ஈரோடு மாவட்டத்தில் கோபி அந்தியூர் கொடுமுடி பவானி உள்பட 11 கிளைகளில் 800 க்கும் ம் மேற்பட்ட பஸ்கள் இயக்கப்பட்டு வந்தன. இதில் முதல் கட்டமாக நேற்று முதல் 100க்கும் மேற்பட்ட பஸ்கள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி நேற்று காலை 6 மணி முதல் பஸ்கள் இயக்கப்பட்டன, பணிமனைகளில் இருந்து பஸ்கள் கிருமிநாசினி மூலம் சுத்தப்படுத்தப்பட்டு ஈரோடு பஸ் நிலையத்திற்கு கொண்டுவரப்பட்டன. பஸ் டிரைவர்கள், கண்டக்டர்கள் முக கவசம் மற்றும் கையுறை அணிந்து இருந்தனர். முக கவசம் அணிந்த பயணிகள் மட்டுமே பஸ்ஸில் ஏற அனுமதிக்கப்பட்டனர். பஸ்ஸின் பின்பக்க வழியாக பயணிகள் ஏறினர். அப்போது சனிடைசர் மூலம் கைகள் சுத்தப்படுத்தப்பட்டு பின்னரே உள்ளே அனுமதிக்கப்பட்டனர். ஒரு பஸ்ஸில் 24 பயணிகள் மட்டுமே பயணம் செய்ய அனுமதி அளிக்கப்பட்டிருந்தது.

ஈரோட்டில் இரண்டு மாதங்களுக்கு பிறகு நேற்று பஸ் போக்குவரத்து தொடங்கியது குறைந்த அளவே பயணிகள் பயணம்!
ஈரோட்டில் பஸ்ஸில் பயணம் செய்த பயணிகளுக்கு தெர்மாமீட்டர் வைத்து பரிசோதனை செய்யப்பட்டது

ஆனால் நேற்று இயங்கிய பஸ்ஸில் பத்துக்கும் குறைவான பயணிகளே பயணம் செய்ததை காணமுடிந்தது. பயணிகளின் உடல் வெப்பநிலையை கண்டறியும் வகையில் தேர்மல் ஸ்கேன் மூலம் பரிசோதனை செய்யப்பட்டது. பயணிகளின் பெயர் முகவரி தொலைபேசி எண் போன்றவை பதிவு செய்யப்பட்டன. நேற்று முதல் நாள் என்பதால் பயணிகள் அதிகளவு வரவில்லை சொற்ப அளவிலே வந்திருந்தனர். தொலைதூரம் செல்லும் பஸ்களில் ஒரு பயணிகள் 2 பயணிகள் விதம் பயணம் செய்ததை காண முடிந்தது. உதாரணமாக ஈரோட்டிலிருந்து அந்தியூர் செல்லும் பஸ்ஸில் ஒரு பயணி மட்டுமே பயணம் செய்தார் டிரைவர்கள். கண்டக்டர்கள் உடல் வெப்பநிலை பரிசோதிக்கப்பட்டது. தொலைதூர பஸ்கள் ஆன,சத்தியமங்கலம் கொடுமுடி ,அந்தியூர், பவானி, கோபி போன்ற பஸ்களில் 5 க்கும் குறைவான பயணிகள் பயணம் செய்தனர். பஸ்ஸில் கட்டணம் உயர்த்தப்படவில்லை. பழைய கட்டண முறையை தொடர்ந்தது. அதே போல் 10 வயதுக்கு உட்பட்ட சிறுவர்கள் கர்ப்பிணிகள் வயதானவர்கள் முடிந்த அளவு பஸ் பயணத்தை தவிர்க்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டு இருந்தது.

-ரமேஷ்கந்தசாமி