பேச்சுவார்த்தைக்கு அழைக்காத அரசு… பஸ் ஸ்டிரைக் தொடரும்!

 

பேச்சுவார்த்தைக்கு அழைக்காத அரசு… பஸ் ஸ்டிரைக் தொடரும்!

அரசுடன் ஊதிய உயர்வு ஒப்பந்தம் போடப்பட்டு 18 மாதங்களாகியும் நடைமுறைப்படுத்தவில்லை, தற்காலிக ஊழியர்களைப் பணி நிரந்தரம் செய்யவில்லை, ஓய்வூதியப் பலன்கள் முறையாகச் செலுத்துதல் உள்ளிட்ட பிரச்சினைகளை அரசு தீர்க்காததால் போக்குவரத்து தொழிற்சங்கங்கள் இன்று வேலைநிறுத்தப் போராட்டத்தை அறிவித்தன. அறிவிப்பு வெளியான உடன் போராட்டத்தில் ஈடுபடும் தொழிலாளர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என அரசுத் தரப்பிலிருந்து எச்சரிக்கப்பட்டது.

பேச்சுவார்த்தைக்கு அழைக்காத அரசு… பஸ் ஸ்டிரைக் தொடரும்!

ஆனால் தொழிற்சங்கங்கள் சொன்னபடியே போராட்டம் நடத்துவோம்; பின்வாங்க மாட்டோம் என திட்டவட்டமாக அறிவித்தன. நிலைமையின் தீவிரத்தை உணர்ந்துகொண்ட அரசு மெட்ரோ ரயில்களை அதிகப்படியாக இயக்க அறிவுறுத்தியது. மேலும், பாமக, பாஜக உள்ளிட்ட கூட்டணிக் கட்சிகளின் தொழிற்சங்க ஆட்களைக் கொண்டும் தற்காலிக தொழிலாளர்களையும் ஏற்பாடு செய்திருந்தது. பேருந்து இயக்கம் தடைபடக் கூடாது என்பதால் இந்த ஏற்பாடை செய்தது. ஆனால் தொழிற்சங்கங்களைப் பேச்சுவார்த்தைக்கு அரசு அழைக்கவில்லை.

பேச்சுவார்த்தைக்கு அழைக்காத அரசு… பஸ் ஸ்டிரைக் தொடரும்!

இதையெல்லாம் கண்டுகொள்ளாமல் திட்டமிட்டபடி நள்ளிரவே போராட்டத்தைத் தொடங்கினர். இச்சூழலில் சென்னையில் தொழிற்சங்க கூட்டமைப்பின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த சிஐடியு சங்கத்தைச் சேர்ந்த சவுந்திரராஜன் பேசும்போது, “கோரிக்கைகள் குறித்து பேச்சுவார்த்தைக்கு அரசு அழைக்காததால் வேலைநிறுத்தம் தொடரும். அரசு அறிவித்த 1,000 ரூபாய் இடைக்கால நிவாரணம் ஏற்க கூடியதாக இல்லை” என்றார்.