நாளை முதல் அனைத்து மாவட்டங்களிலும்… சாலைகளில் பறக்க தயாராகும் பேருந்துகள்!

 

நாளை முதல் அனைத்து மாவட்டங்களிலும்… சாலைகளில் பறக்க தயாராகும் பேருந்துகள்!

தமிழ்நாடு முழுவதும் கடந்த மே மாதம் கொரோனா இரண்டாம் அலை உச்சத்தில் இருந்தது. அப்போது முதலே பேருந்து சேவை முற்றிலுமாக நிறுத்தப்பட்டது. ஜூன் மாதமும் கொரோனா பாதிப்பு குறையவில்லை. மாதத்தின் மத்தியிலிருந்து தான் கொரோனா பரவல் குறைந்து வந்தது. அதன்படி மூன்று வகைகளாக மாவட்டங்கள் பிரிக்கப்பட்டு விதவிதமான தளர்வுகள் அளிக்கப்பட்டன. முதற்கட்டமாக சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய நான்கு மாவட்டங்களில் மட்டும் பேருந்து சேவை அனுமதிக்கப்பட்டது.

நாளை முதல் அனைத்து மாவட்டங்களிலும்… சாலைகளில் பறக்க தயாராகும் பேருந்துகள்!

இதற்குப் பிறகு வகை 2இல் இருந்து 23 மாவட்டங்களுக்குள்ளும் பேருந்து போக்குவரத்து இயக்க அரசு அனுமதித்தது. கோவை உள்ளிட்ட 11 மாவட்டங்களில் கொரோனா பரவல் குறையவில்லை என்பதால் அங்கு அனுமதிக்கப்படவில்லை. இச்சூழலில் தமிழ்நாட்டில் அனைத்து மாவட்டங்களிலுமே பாதிப்பு பெருமளவு குறைந்திருக்கிறது. இச்சூழலில் நேற்று முன்தினம் கூடுதலான தளர்வுகள் வழங்கி ஊரடங்கை நீட்டித்து முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவிட்டார்.

நாளை முதல் அனைத்து மாவட்டங்களிலும்… சாலைகளில் பறக்க தயாராகும் பேருந்துகள்!

அதில் மூன்று வகையாக பிரிக்கப்பட்ட மாவட்டங்கள் ஒன்றிணைக்கப்பட்டு மொத்தமாகவே தளர்வுகள் வழங்கினார். அதன்படி அனைத்து மாவட்டங்களிலும் பேருந்து சேவைக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. கொரோனா பரவல் இரண்டாம் அலை இன்னும் முடிவடையததால் மக்கள் சுயக்கட்டுப்பாடுடன் பேருந்துகளில் பயணிக்க அரசு வலியுறுத்தியுள்ளது. அதேபோல 50% பயணிகளுடனே பேருந்துகள் பயணிக்க அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது. பேருந்துகளில் மக்கள் மாஸ்க் அணிதல், சமூக இடைவெளியைக் கடைப்பிடித்தல் ஆகியவற்றை கட்டாயமாக பின்பற்றவும் அறிவுறுத்தியுள்ளது.