15 நாட்களுக்கு மீண்டும் பேருந்து சேவை நிறுத்தம்!

 

15 நாட்களுக்கு மீண்டும் பேருந்து சேவை நிறுத்தம்!

ஊரடங்கை ஜூலை 31 ஆம் தேதிவரை நீட்டித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளாது. சென்னை காவல் எல்லை மற்றும் அதை ஒட்டிய பகுதிகளில் ஜூலை 5 வரை முழு ஊரடங்கு தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

15 நாட்களுக்கு மீண்டும் பேருந்து சேவை நிறுத்தம்!

மறு உத்தரவு வரும்வரை தொடர்ந்து அமலில் இருக்கும் கட்டுப்பாடுகள்:

  • மாநிலத்தில் மாவட்டங்களுக்குள் தற்போது அனுமதிக்கப்பட்டுள்ள தனியார் மற்றும் அரசு பொது பேருந்து போக்குவரத்து 1-7-2020 முதல் 15-7-2020 வரை தற்காலிகமாக நிறுத்தப்படுகிறது.

நகர்ப்புர வழிபாட்டுத்தலங்களிலும், பெரிய வழிபாட்டு தலங்களிலும் பொதுமக்கள் வழிபாட்டுக்கு தடை

  • அனைத்து மதம் சார்ந்த கூட்டங்களுக்கு தடை
  • நீலகிரி, கொடைக்கானல்,ஏற்காடு போன்ற சுற்றுலா தலங்களுக்கும், வெளியூர் சுற்றுலா பயணிகள் செல்ல தடை
  • தங்கும் வசதியுடன் கூடிய ஹோட்டல், ரிசார்ட்டுகள், பிற விருந்தோம்பல் செவைகளுக்கு தடை
  • வணிக வளாகங்கள் திறக்க தடை
  • பள்ளி, கல்லூரிகள் மற்றும் பயிற்சி நிறுவனங்கள் இயங்க தடை. மாறாக இணைய வழிக் கல்விக்கு அனுமதி
  • சர்வதேச விமான போக்குவரத்திற்கான தடை நீட்ட்பு
  • மெட்ரோ/ மின்சார ரயில் சேவைக்கு தடை
  • திரையரங்குகள், உடற்பயிற்சி கூடங்கள், நீச்சல் குளங்கள், கேளிக்கை கூடங்கள், மதுக்கூடங்கள், பெரிய அரங்குகள், கூட்ட அரங்குகள், கடற்கரை, சுற்றுலா தலங்கள் ஆகிய மக்கள் கூடும் இடங்களுக்கு தடை
  • அரசியல் நிகழ்வுகள், விளையாட்டு, சமய, கல்வி விழாக்கள், கூட்டங்கள் நடத்தத் தடை
  • மாநிலங்களுக்கு இடையேயான பேருந்து போக்குவரத்துக்கு தடை