தமிழகத்தில் 50% பயணிகளுடன் பேருந்து சேவையை தொடங்க வாய்ப்பு!

 

தமிழகத்தில் 50% பயணிகளுடன் பேருந்து சேவையை தொடங்க வாய்ப்பு!

தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலையின் காரணமாக கடந்த மாதம் 10-ஆம் தேதி முதல் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. மூன்று வாரங்களாக தொடரும் ஊரடங்கில் அவ்வப்போது பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டுவருகின்றன. கடந்த 14 ஆம் தேதி முதல் ஆட்டோ, டாக்சிகள் ஓட அனுமதியளிக்கப்பட்டு அத்தியாவசிய தேவைகளுக்காக பல்வேறு கடைகளை மாலை 5 மணி வரை திறக்க அனுமதி வழங்கப்பட்டது. பாதிப்பு அதிகமாக உள்ள கோவை உள்ளிட்ட 11 மாவட்டங்களில் ஒரு சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டன.

தமிழகத்தில் 50% பயணிகளுடன் பேருந்து சேவையை தொடங்க வாய்ப்பு!

வரும் 21 ஆம் தேதியுடன் ஊரடங்கு நிறைவடையும் நிலையில், ஊரடங்கை மேலும் நீட்டித்து கூடுதல் தளர்வுகள் அறிவிப்பது தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மருத்துவ நிபுணர்களுடன் இன்று ஆலோசனை நடத்தவுள்ளார். ஆலோசனைக்கு பின் ஜவுளி கடைகள் திறக்க அனுமதி, சிறிய வழிபாட்டுத் தலங்களுக்கு அனுமதி, அத்தியாவசிய கடைகளுக்கான நேரத்தை அதிகரிப்பது, மாவட்டங்களுக்கு உள்ளேயும், வெளியேயும் 50 சதவீத பயணிகளுடன் அரசு போக்குவரத்து சேவையை தொடங்குவது உள்ளிட்ட தளர்வுகள் அளிக்கப்பட்ட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.