புதுச்சேரிக்கு பேருந்து இயக்கம் ; எழுத்து தேர்வுகள் நடத்த அனுமதி!

 

புதுச்சேரிக்கு பேருந்து இயக்கம் ; எழுத்து தேர்வுகள் நடத்த அனுமதி!

தமிழகத்தில் கொரோனா தொற்று காரணமாக ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் வருகிற 19 ஆம் தேதி வரை ஊரடங்கை நீட்டிக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. நோய்த்தொற்றை கட்டுப்படுத்தும் விதமாக திருமண நிகழ்வுகளில் 50 நபர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவர் . இறுதி சடங்குகளில் 20 நபர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவர். நோய் கட்டுப்பாட்டு பகுதிகள் தவிர அனைத்து பகுதிகளிலும் ஏற்கனவே அனுமதிக்கப்பட்டுள்ள செயல்பாடுகள் தொடர்ந்து அனுமதிக்கப்படும்.

ஏற்கனவே இரவு 8 மணி வரை செயல்பட அனுமதிக்கப்பட்டுள்ள கடைகள் மற்றும் செயல்பாடுகள் 12-ஆம் தேதி முதல் இரவு 9 மணி வரை செயல்படும்.

புதுச்சேரிக்கான பேருந்து சேவை தொடங்கப்படுகிறது.

புதுச்சேரிக்கு பேருந்து இயக்கம் ; எழுத்து தேர்வுகள் நடத்த அனுமதி!

ஒன்றிய மற்றும் மாநில அரசுகளின் வேலைவாய்ப்பு தொடர்பான எழுத்துத் தேர்வுகள் அரசு வழங்கியுள்ள வழிகாட்டு நெறிமுறைக் உட்பட்ட நடத்த அனுமதி அளிக்கப்படுகிறது. இதுகுறித்த விவரங்களை தேர்வு நடத்தும் அமைப்புகள் முன்னதாக மாவட்ட ஆட்சியரிடம் தெரிவிக்க வேண்டும்.

உணவகங்கள் , தேனீர் கடைகள் ,நடைபாதைக் கடைகள், இனிப்பு கார வகைகள் விற்பனை கடைகள் ஆகியவை வழக்கமாக 50 சதவீத வாடிக்கையாளர்களுடன் இரவு 9 மணி வரை செயல்பட அனுமதி அளிக்கப்படுகிறது.

அனுமதிக்கப்பட்டுள்ள அனைத்து கடைகள் மற்றும் பொதுமக்கள் கூடும் இடங்களில் கடைகள் நுழைவாயிலில் வாடிக்கையாளர் பயன்படுத்தும் வகையில் சுத்திகரிப்பான் கட்டாயம் வைக்கப்படுவதோடு, உடல் வெப்பநிலை பரிசோதனைக் கருவி கொண்டு பரிசோதனை செய்ய வேண்டும்.

புதுச்சேரிக்கு பேருந்து இயக்கம் ; எழுத்து தேர்வுகள் நடத்த அனுமதி!

குளிர்சாதன வசதி பயன்படுத்தும் இடங்களில் கதவுகள் மற்றும் ஜன்னல்கள் திறக்கப்பட போதுமான காற்றோட்ட வசதியுடன் செயல்படுவதோடு , கடைகளில் சமூக இடைவெளியை கடைபிடிக்கும் வகையில் ஒரே நேரத்தில் அதிகப்படியான நபர்களை அனுமதிக்கக் கூடாது.

கடைகளில் பணிபுரிபவர்களும், வாடிக்கையாளர்களும் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும்.

கடைகளை நுழைவாயிலில் பொது மக்கள் வரிசையில் காத்திருக்கும் போது ஒரு நபருக்கு மற்றொருவருக்கும் இடையே போதுமான இடைவெளி இருக்கும் வகையில் குறியீடுகள் போடப்படவேண்டும்.