#BREAKING 4 மாவட்டங்களில் பேருந்து சேவைக்கு அனுமதி!

 

#BREAKING 4 மாவட்டங்களில் பேருந்து சேவைக்கு அனுமதி!

தமிழ்நாட்டில் நாளை முதல் ஜூன் 28ம் தேதி வரை புதிய தளர்வுகளுடன் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு உள்ளது.

தமிழகத்தில் கொரோனா காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகிறது. ஊரடங்கு நாளை காலை 6 மணிக்கு முடிவுக்கு வரும் நிலையில் மருத்துவ வல்லுனர்கள் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் உடன் நடத்தப்பட்ட ஆலோசனை கூட்டத்தில் தெரிவிக்கப்பட்ட கருத்துக்களின் அடிப்படையில் நோய்த்தொற்றின் தன்மையிலே மாவட்ட வாரியாக ஆய்வு செய்தும், நோய் தொற்று பரவாமல் தடுத்து மக்களின் விலைமதிப்பற்ற உயிர்களைக் காக்கும் நோக்கிலும், இந்த ஊரடங்கு மேலும் ஒரு வாரகாலம் வருகின்ற 28ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது என்று தமிழக முதல்வர் மு.க .ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

#BREAKING 4 மாவட்டங்களில் பேருந்து சேவைக்கு அனுமதி!

அத்துடன் நோய் தொற்று பாதிப்பின் அடிப்படையில் மாவட்டங்கள் மூன்று வகைகளாக பிரிக்கப்பட்டுள்ளன

வகை 1 – 11 மாவட்டங்கள்

கோயம்புத்தூர், நீலகிரி, திருப்பூர், ஈரோடு, சேலம் ,கரூர், நாமக்கல், தஞ்சாவூர், திருவாரூர் ,நாகப்பட்டினம், மயிலாடுதுறை மாவட்டங்கள்

வகை 2 – 23 மாவட்டங்கள்

அரியலூர் ,கடலூர் ,தர்மபுரி ,திண்டுக்கல் ,கள்ளக்குறிச்சி, கன்னியாகுமரி ,கிருஷ்ணகிரி ,மதுரை, பெரம்பலூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம் ,ராணிப்பேட்டை, சிவகங்கை, தேனி ,தென்காசி ,திருநெல்வேலி ,திருவள்ளூர் ,திருவண்ணாமலை, தூத்துக்குடி ,திருச்சி ,விழுப்புரம் ,வேலூர் மற்றும் விருதுநகர்

வகை 3 – 4 மாவட்டங்கள்

சென்னை ,திருவள்ளூர் ,காஞ்சிபுரம், செங்கல்பட்டு என பிரிக்கப்பட்டுள்ளது. இதில் 11 மாவட்டங்களுக்கு ஏற்கனவே அனுமதிக்கப்பட்ட செயல்பாடுகள் மட்டும் தொடர்ந்து அமல்படுத்தப்படும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது . வகை 2ல் உள்ள 23 மாவட்டங்களில் ஏற்கனவே அனுமதிக்கப்பட்டுள்ள சில செயல்பாடுகளுக்கான நேர தொடர்புகளும் கூடுதலாக அனுமதித்த உத்தரவிடப்பட்டுள்ளது.

#BREAKING 4 மாவட்டங்களில் பேருந்து சேவைக்கு அனுமதி!

சென்னை ,திருவள்ளூர் ,காஞ்சிபுரம், மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களுக்கிடையே பொது போக்குவரத்து நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி, குளிர்சாதன வசதி இல்லாமலும் 50 சதவீத இருக்கைகளில் அமர்ந்து பயணிக்க அனுமதியளிக்கப்பட்டுள்ளது. வாடகை வாகனங்கள் ,டாக்சிகள் மற்றும் ஆட்டோக்களில் பயணிகள் இபதிவு இல்லாமல் செல்ல அனுமதிக்கப்படுவர். மேலும் வாடகை டாக்சி ஓட்டுனர் தவிர மூன்று பயணிகளும் , ஆட்டோக்களில் ஓட்டுநர் தவிர இரண்டு பயணிகள் மற்றும் பயணிக்க அனுமதி அளிக்கப் பட்டுள்ளனர்.