”பள்ளிகள் மூடல் எதிரொலி – பஸ் விற்பனை 90 % வீழ்ச்சி” !

 

”பள்ளிகள் மூடல் எதிரொலி – பஸ் விற்பனை 90 % வீழ்ச்சி” !

கொரோனா தொற்று பரவல் காரணமாக பள்ளி, கல்லூரிகள் திறக்கப்படாத நிலையில், பேருந்து விற்பனை, கடந்த 6 மாதத்தில் 90 சதவீதம் வீழ்ச்சி அடைந்துள்ளது தெரியவந்துள்ளது.

கடந்த நிதியாண்டின் ஏப்ரல் முதல் செப்டம்பர் வரையிலான முதல் அரையாண்டில், மொத்தம் 32 ஆயிரத்து 235 பேருந்துகள் விற்பனையாகி இருந்தன. இந்நிலையில் நடப்பு நிதியாண்டின் முதல் அரையாண்டில் 2,569 பேருந்துகள் மட்டுமே விற்பனையாகி உள்ளது. இது வருடாந்திர அடிப்படையில் பார்க்கும் போது, 90 சதவீத வீழ்ச்சியாகும்.

”பள்ளிகள் மூடல் எதிரொலி – பஸ் விற்பனை 90 % வீழ்ச்சி” !

பள்ளி கல்லூரிகள் மூடப்பட்டிருப்பதாலும், மாநில போக்குவரத்து யூனிட்டுகள் நிதி நெருக்கடியில் சிக்கி தவித்து வருவது உள்ளிட்ட காரணங்களால் பஸ் விற்பனை கடும் வீழ்ச்சியை சந்தித்துள்ளதாக துறை வல்லுனர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

”பள்ளிகள் மூடல் எதிரொலி – பஸ் விற்பனை 90 % வீழ்ச்சி” !

குறிப்பாக பள்ளிகள் மூடப்பட்டிருப்பதால் பள்ளி பேருந்து விற்பனை கடும் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் பல அலுவலக பணியாளர்கள் வீட்டில் இருந்து பணிபுரிவதால் அவர்களின் போக்குவரத்திற்காக வாங்கப்படும் பேருந்துகளின் விற்பனையும் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இதனிடையே, கடந்த செப்டம்பரில் 670 பஸ்கள் மட்டுமே விற்பனையாகி இருப்பதும் தெரியவந்துள்ளது. அதே சமயம், கடந்த 2019ம் ஆண்டின் செப்டம்பரில் 3,323 பஸ்கள் விற்பனையாகி இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

  • எஸ். முத்துக்குமார்