மின்கம்பி மீது பேருந்து உரசி 4 பேர் பலி: அறிக்கை அளிக்க, மனித உரிமை ஆணையம் உத்தரவு

 

மின்கம்பி மீது பேருந்து உரசி 4 பேர் பலி: அறிக்கை அளிக்க, மனித உரிமை ஆணையம் உத்தரவு

தஞ்சாவூரில் மின்கம்பி மீது பேருந்து உரசிய விபத்தில் 4 பேர் பலியான சம்பவம் தொடர்பாக அறிக்கை தாக்கல் செய்ய டான்ஜெட்கோ தலைவர் மற்றும் தஞ்சாவூர் கண்காணிப்பு பொறியாளர் ஆகியோருக்கு தமிழ்நாடு மாநில மனித உரிமை ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

மின்கம்பி மீது பேருந்து உரசி 4 பேர் பலி: அறிக்கை அளிக்க, மனித உரிமை ஆணையம் உத்தரவு

தஞ்சாவூர் மாவட்டம் திருக்காட்டுப்பள்ளியில் இருந்து தஞ்சாவூர் நோக்கி சென்ற தனியார் பேருந்து அருகே எதிரே வந்த லாரி சாலையில் இருந்து கீழே இறங்கிய போது தாழ்வாக தொங்கும் மின்கம்பிகள் விபத்துக்குள்ளானது. இதில் பேருந்தில் பயணித்த கல்யாணராமன், கௌசல்யா, கணேசன், நடராஜன் ஆகிய நான்கு பேர் மின்சாரம் தாக்கி பலியாகினர். இந்த சம்பவம் தொடர்பாக செய்தித்தாள்களில் வெளிவந்த செய்தியின் அடிப்படையில், தமிழ்நாடு மாநில மனித உரிமை ஆணையம் தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்து உள்ளது.

இந்த சம்பவம் தொடர்பாக இரண்டு வாரங்களில் விரிவான அறிக்கை தாக்கல் செய்யும்படி தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழக தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர், நிர்வாக கண்காணிப்பு பொறியாளருக்கு மனித உரிமை ஆணைய உறுப்பினர் ஜெயச்சந்திரன் உத்தரவிட்டுள்ளார்