“கொரானா டிரஸ் போட்டுக்கிட்டா இந்த வேலை பண்ணுவீங்க …”. நகைக்கடையின் சிசிடிவி கேமெராவில் சிக்கிய காட்சி .

“கொரானா டிரஸ் போட்டுக்கிட்டா இந்த வேலை பண்ணுவீங்க  …”. நகைக்கடையின் சிசிடிவி கேமெராவில் சிக்கிய காட்சி .

 கொரானா ட்ரெஸ் போட்ட ஒரு கொள்ளையன் ஒரு நகைக்கடைக்குள் புகுந்து, ஆறு கோடி ரூபாய் மதிப்புள்ள நகைக்களை கொள்ளையடித்த சிசிடிவி காட்சி பலரை அதிர்ச்சியடைய செய்துள்ளது.

“கொரானா டிரஸ் போட்டுக்கிட்டா இந்த வேலை பண்ணுவீங்க  …”. நகைக்கடையின் சிசிடிவி கேமெராவில் சிக்கிய காட்சி .

தென்கிழக்கு டெல்லியின் கல்காஜியில் அஞ்சலி ஜூவல்லரி என்ற நகைக்கடை உள்ளது .இந்த கடையில் தினமும் லட்சக்கணக்கில் தங்கம் மற்றும் வைர நகைகள்  விற்பனையாகும் .இதை அந்த பகுதியிலிருக்கும் சில கொள்ளையர்கள் நோட்டமிட்டு வந்துள்ளார்கள் .அதனால் அந்த நகை கடைக்குள் புகுந்து நகைகளை கொள்ளையடிக்க பல நாட்களாக திட்டமிட்டார்கள் .ஆனால் இந்த சிசிடிவி கேமெரா இருப்பதால் அவர்கள் அதில் சிக்கி விடுவோம் என்று பயந்தார்கள் .அதனால் அந்த கேமராவில் சிக்காமல் எப்படி கொள்ளையடிப்பது என்று யோசித்தார்கள் .

இதற்கிடையே  கொரானா வைரஸ் பரவியதால்  அதிலிருந்து தப்பிக்க டாக்டர்கள்  மற்றும் மருத்துவ பணியாளர்கள் அணியும் பாதுகாப்பு உடையை பார்த்ததும் அந்த கொள்ளையனுக்கு ஒரு யோசனை தோன்றியுள்ளது .அதனால் அந்த பாதுகாப்பு உடையை அணிந்து கொண்டு அந்த நகைகடைக்குள் கடந்த செவ்வாய் கிழமை இரவு நுழைந்தார் .பிறகு இரவு முழுவதும் விடிய விடிய அந்த கடைக்குள் வேட்டையாடி  6 கோடி ரூபாய் மதிப்பிலான நகைகளையெல்லாம் மூட்டை கட்டினார் .அதன் பிறகு அதிகாலை 4 மணிக்கு அந்த கடையிலிருந்து பக்கத்து வீட்டு மாடி வழியாக தப்பித்து ஓடிவிட்டான் .

மறுநாள் புதன் கிழமை அக்கடைக்கு வந்த அந்த  கடையின் மேனேஜர் கடையிலிருந்த நகைகள் கொள்ளையடிக்கப்பட்டிருப்பதை  பார்த்து  அதிர்ச்சியடைந்து  போலீசுக்கு தகவல் கூறினார்  .போலீசார் விரைந்து வந்து கொள்ளை வழக்கு பதிவு செய்தார்கள் .பிறகு அந்த கொள்ளையனை பிடித்துதிருட்டு போன ஆறு கோடி ரூபாய் மதிப்பிலான நகைகளை கைப்பற்ற விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள் .

“கொரானா டிரஸ் போட்டுக்கிட்டா இந்த வேலை பண்ணுவீங்க  …”. நகைக்கடையின் சிசிடிவி கேமெராவில் சிக்கிய காட்சி .