பர்கர் லேட்டா கொடுத்த சர்வர் -கடுப்பாகி துப்பாக்கியால் சுட்ட கஸ்டமர் .-சப்பாத்தி சுடுவது போல துப்பாக்கியால் சுடும் அமெரிக்கர்கள் .

 

பர்கர் லேட்டா கொடுத்த சர்வர் -கடுப்பாகி துப்பாக்கியால் சுட்ட கஸ்டமர் .-சப்பாத்தி  சுடுவது போல துப்பாக்கியால் சுடும் அமெரிக்கர்கள் .

ஒரு சர்வர் லேட்டாக பர்கர் கொடுத்ததால் வந்த கோபத்தில் சாப்பிட வந்த ஒருவர் ,சர்வரை துப்பாக்கியால் சுட்ட சம்பவம் அனைவரையும் அதிர்ச்சியடைய செய்துள்ளது .

பர்கர் லேட்டா கொடுத்த சர்வர் -கடுப்பாகி துப்பாக்கியால் சுட்ட கஸ்டமர் .-சப்பாத்தி  சுடுவது போல துப்பாக்கியால் சுடும் அமெரிக்கர்கள் .

அமெரிக்காவில் உள்ள புளோரிடா மாநிலத்தில் ஆர்லாண்டோவில் உள்ள ஒரு பர்கர் கடைக்கு ஞாயிற்றுக்கிழமை 37 வயதான கெல்விஸ் ரோட்ரிக்ஸ் டோர்ம்ஸ் மற்றும் அவருடைய காதலி ஆகியோர் சாப்பிட வந்தனர் .அப்போது விடுமுறை நாள் என்பதால் கடையில் கூட்டம் நிரம்பி வழிந்தது .இதனால் கஸ்டமர்களுக்கு குறிப்பிட்ட நேரத்தில் உணவை கொடுக்க முடியாமல் சர்வர்கள் திண்டாடினார்கள் .
அப்போது அவர்களுக்கு 22 வயதான ஜோசுவா என்ற சர்வர் ஆர்டர் எடுக்க வந்தார் .அவரிடம் டோர்ம்ஸின் காதலி பர்கர் ஆர்டர் செய்தார் .பிறகு இருவரும் சிறிது நேரம் காத்திருந்தனர் .ஆனால் நீண்ட நேரமாகியும் பர்கர் வராததால் அந்த பெண் கடுப்பாகி ,தன்னுடைய காதலனிடம் புகார் கூறினார் .அங்கு வந்த சர்வரிடம் இது பற்றி கேட்டதற்கு ,இன்றைக்கு விடுமுறை நாள் என்பதால் கூட்டம் அதிகம் சற்று பொறுங்கள் என்று கூறி விட்டு சென்று விட்டார் .உடனே அந்த பெண் தன்னுடைய பணத்தை ரிட்டன் வாங்கிக்கொண்டு சென்று விட்டார் .இருந்தாலும் அவரின் காதலன் கெல்விஸ் ரோட்ரிக்ஸ் டோர்ம்ஸ்க்கு அந்த சர்வர் மீதான கோபம் குறையவில்லை .

அந்த சர்வர் வேண்டுமென்றே தனக்கு பர்கர் தரவில்லை என நினைத்து ,அந்த சர்வரை பழிவாங்க கார்பார்க்கிங்கில் காத்துக்கொண்டிருந்தார் .அப்போது டூட்டி முடிந்து சர்வர் ஜோஸுவா அங்கே வந்தார் .உடனே அவரை பார்த்ததும் டோர்ம்ஸ் தன்னுடைய துப்பாக்கியை எடுத்து அவரை நோக்கி சுட்டார் .அவர் சுட்டதில் ஜோஸுவா அதே இடத்தில துடிதுடித்து இறந்தார் .துப்பாக்கி சத்தம் கேட்டு ஓடி வந்த போலீசார் டோர்ம்ஸை கைது செய்து ,அவர் மீது கொலை வழக்கு பதிவு செய்தனர்.

பர்கர் லேட்டா கொடுத்த சர்வர் -கடுப்பாகி துப்பாக்கியால் சுட்ட கஸ்டமர் .-சப்பாத்தி  சுடுவது போல துப்பாக்கியால் சுடும் அமெரிக்கர்கள் .