பாம்பனுக்கு மிக அருகில் புரெவி புயல்: விடிய விடிய வெளுத்து வாங்கிய கனமழை!

பாம்பனுக்கு மிக அருகில் புரெவி புயல்: விடிய விடிய வெளுத்து வாங்கிய கனமழை!

புரெவி புயல் பாம்பன் பகுதியை நெருங்கி வருவதால், சென்னை உட்பட பல இடங்களில் விடிய விடிய பரவலாக கனமழை பெய்தது.

பாம்பனுக்கு மிக அருகில் புரெவி புயல்: விடிய விடிய வெளுத்து வாங்கிய கனமழை!

வங்கக்கடலில் மையம் கொண்டிருக்கும் புயல் இலங்கையில் கரையைக் கடந்த நிலையில், பாம்பனில் இருந்து 90 கி.மீ தொலைவில் மையம் கொண்டுள்ளது. புயல் எச்சரிக்கை நடவடிக்கையாக கடலுக்கு சென்ற மீனவர்கள், மீண்டும் கரை திரும்பியுள்ளனர். தொடர் கனமழை பெய்து வருவதால் காரைக்காலில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டிருக்கிறது. மேலும், புயலை எதிர்கொள்ள தேசிய பேரிடர் மீட்புக் குழுவிடன் தென்தமிழகம் தயார் நிலையில் இருக்கிறது.

பாம்பனுக்கு மிக அருகில் புரெவி புயல்: விடிய விடிய வெளுத்து வாங்கிய கனமழை!

இந்த நிலையில், புயலின் தாக்கத்தால் தூத்துக்குடி,திருச்சி,ராமேஸ்வரம், நாகை, தஞ்சாவூர், திருவாரூர், விழுப்புரம் உள்ளிட்ட பல மாவட்டங்களில் விடிய விடிய கனமழை வெளுத்து வாங்கியது. அங்கு மட்டுமின்றி சென்னை மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளிலும் நேற்று இரவில் இருந்து விட்டு விட்டு கனமழை பெய்தது. குறிப்பாக, தாம்பரம், பெருங்களத்தூர், வண்டலூர், கேளம்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் இன்று அதிகாலை மழை கொட்டித் தீர்த்தது. மேலும், செம்பரம்பாக்கம், திருவேற்காடு, திருமுல்லைவாயல் உள்ளிட்ட பகுதிகளிலும் மழை பெய்தது.