புரெவி புயல்: ‘வெளியே செல்லாதீர்’ என ராமநாதபுரம் மக்களுக்கு ஆட்சியர் வேண்டுகோள்!

 

புரெவி புயல்: ‘வெளியே செல்லாதீர்’ என ராமநாதபுரம் மக்களுக்கு ஆட்சியர் வேண்டுகோள்!

‘வெளியே செல்லாதீர்கள்’என ராமநாதபுரம் மாவட்ட மக்களுக்கு ஆட்சியர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

வங்கக்கடலில் உருவான புரெவி புயல் கன்னியாகுமரியில் இருந்து 480 கிலோமீட்டர் கிழக்கு வடகிழக்கு திசையில் நிலை கொண்டுள்ளது. தற்போது13 கிலோ மீட்டர் வேகத்தில் மேற்கு வட மேற்கு திசையை நோக்கி நகர்ந்து வருகிறது. திருகோணமலைக்கு கிழக்கே வடகிழக்கு திசையில் 20 கிலோமீட்டர் தொலைவில் தற்போது நிலைகொண்டுள்ளது. தொடர்ந்து மேற்கு வடமேற்கு திசையை நோக்கி நகர்ந்து திருகோணமலைக்கு வடக்கே இன்று நள்ளிரவு கரையை கடக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. புரெவி புயல் நாளை பிற்பகல் பாம்பனுக்கு அருகே வரும் என்றும் பிறகு பாம்பனுக்கும் கன்னியாகுமரிக்கும் இடையே நாளை நள்ளிரவு அல்லது நான்காம் தேதி அதிகாலை கரையை கடக்கும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

புரெவி புயல்: ‘வெளியே செல்லாதீர்’ என ராமநாதபுரம் மக்களுக்கு ஆட்சியர் வேண்டுகோள்!

இந்நிலையில் புரெவி புயல் எதிரொலியால் ராமநாதபுரம் மாவட்டம் கமுதி, முதுகுளத்தூர், அபிராமம் உள்ளிட்ட சுற்றுவட்டாரப் பகுதிகளில் லேசான சாரல் மழை பெய்து வருகிறது. புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பொதுமக்கள் டிசம்பர் 3 மற்றும் 4 ஆகிய தேதிகளில் வெளியே செல்வதை தவிர்க்க வேண்டும் என்றும், தாழ்வான பகுதிகளில் வசிப்பவர்கள் அருகே உள்ள நிவாரண மையங்களில் தங்கிக்கொள்ளவும் ராமநாதபுரம் மாவட்ட ஆட்சித் தலைவர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.