‘பாம்பனுக்கு மிக அருகில் புரெவி புயல்’ எப்போது கரையைக் கடக்கும்?

 

‘பாம்பனுக்கு மிக அருகில் புரெவி புயல்’ எப்போது கரையைக் கடக்கும்?

நிவர் புயலை தொடர்ந்து, தெற்கு வங்கக்கடலில் உருவான புரெவி புயல் நேற்று இரவு இலங்கையில் கரையைக் கடந்தது. இந்த புயல் கன்னியாகுமரி – பாம்பன் இடையே கரையைக் கடக்கும் என ஏற்கனவே தெரிவிக்கப்பட்டு இருந்தது. அதன் படி, தற்போது மணிக்கு 13 கி.மீ வேகத்தில் நகரும் புரெவி புயல் தற்போது பாம்பனுக்கு மிக அருகில் நிலை கொண்டிருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

‘பாம்பனுக்கு மிக அருகில் புரெவி புயல்’ எப்போது கரையைக் கடக்கும்?

இந்த புயல் இன்று இரவு அல்லது நாளை காலை கரையைக் கடக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டிருக்கும் நிலையில், புயல் காரணத்தால் தென் மாவட்டங்களில் தொடர் கனமழை பெய்து வருகிறது. நிவர் புயலுக்கு மேற்கொள்ளப்பட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை போன்று, புரெவி புயலை எதிர்கொள்வதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தயார் நிலையில் இருக்கிறது.

இருப்பினும் பாதிப்பு அதிகமாக இருக்கும் மாவட்டங்களாக கணிக்கப்பட்டிருக்கும் கன்னியாகுமரி, ராமநாதபுரம், தூத்துக்குடி உள்ளிட்ட மாவட்டங்களில் பேரிடர் மீட்புக் குழுவினர் தயார் நிலையில் இருக்கின்றனர். இத்தகைய சூழலில், தெற்கு அந்தமான் கடற்பகுதியில் நாளை புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகவிருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.