கிரீன்வேஸ் சாலையில்… பல வசதிகளுடன் அமைச்சர்களுக்காக தயாராகி வரும் பங்களாக்கள்!

கிரீன்வேஸ் சாலையில்… பல வசதிகளுடன் அமைச்சர்களுக்காக தயாராகி வரும் பங்களாக்கள்!

தமிழக சட்டமன்றத் தேர்தலில் அமோக வெற்றி பெற்ற திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், கடந்த 7ம் தேதி முதல்வராக பதவியேற்றுக் கொண்டார். அதே நாளில், அமைச்சர்களும் பதவியேற்றுக் கொண்டனர். கொரோனா காலகட்டத்தில் இக்கட்டான சூழலில், அவர்கள் பதவியேற்றிருப்பதால் பதவியேற்ற அனைவரும் அதிரடியாக களப்பணியில் இறங்கியுள்ளனர். கொரோனாவில் இருந்து மக்களை காக்க முதல்வர் மு.க.ஸ்டாலின் அதிரடி நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறார்.

கிரீன்வேஸ் சாலையில்… பல வசதிகளுடன் அமைச்சர்களுக்காக தயாராகி வரும் பங்களாக்கள்!

இதனிடையே, புதிதாக பதவியேற்ற அமைச்சர்களுக்காக சென்னை கிரீன்வேஸ் சாலையில் பங்களாக்கள் தயாராகி வருகின்றன. சபாநாயகர் பங்களா மட்டும் 1 ஏக்கர் நிலப்பரப்பிலும், அமைச்சர்கள் பங்களா 5,000 சதுர அடி நிலப்பரப்பிலும் கட்டப்பட்டுள்ளது. அதில் பல்வேறு வசதிகள் செய்யப்பட்டுள்ளன. இவற்றை பொதுப்பணி துறை சீரமைத்து வரும் நிலையில், முன்னாள் அமைச்சர்கள் காலி செய்ததும் புதிய அமைச்சர்கள் குடியேறுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. 10 நாட்களுக்குள் காலி செய்யுமாறு முன்னாள் அமைச்சர்களுக்கு அறிவுறுத்தலும் விடுக்கப்பட்டுள்ளது.

கிரீன்வேஸ் சாலையில்… பல வசதிகளுடன் அமைச்சர்களுக்காக தயாராகி வரும் பங்களாக்கள்!

எதிர்க்கட்சித் தலைவராக பொறுப்பேற்றிருக்கும் எடப்பாடி பழனிசாமி, எதிர்க்கட்சித் தலைவர் என்ற முறையில் அதே பங்களாவில் இருப்பார் என தெரிகிறது. மேலும், துணை முதல்வராக இருந்த ஓபிஎஸ்க்கு 3 மாத கால அவகாசம் தரப்படுமென தெரிகிறது.