கேரளா அரசின் திருவோண பம்பர் லாட்டரி ‘பரிசு ரூ.12 கோடி’: கோவில் ஊழியருக்கு அடித்த ஜாக்பாட்!

கேரளா அரசின் திருவோண பம்பர் லாட்டரி ‘பரிசு ரூ.12 கோடி’: கோவில் ஊழியருக்கு அடித்த ஜாக்பாட்!

கேரளாவின் ஓணம் பம்பர் லாட்டரியில் கோவில் ஊழியர் ஒருவருக்கு ரூ.12 கோடி பரிசு கிடைத்திருக்கிறது.

கேரளாவில் ஓணம் பண்டிகையையொட்டி பம்பர் லாட்டரி டிக்கெட்டுகள் விற்கப்படுவது வழக்கம். அதே போல இந்த ஆண்டும் லாட்டரியின் முதல் பரிசு ரூ.12 கோடி என்றும் டிக்கெட்டின் விலை ரூ.3 என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது. வழக்கமாக இருப்பதை விட இந்த ஆண்டு டிக்கெட்டின் விலை அதிகமாக இருந்ததால், அவ்வளவாக டிக்கெட் விற்பனை ஆகாது என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இந்த முறை மொத்தமாக 44 லட்சத்துக்கும் மேல் டிக்கெட் விற்பனை ஆனதால், கேரள அரசுக்கு சுமார் ரூ.22 கோடி லாபம் கிடைத்தது.

கேரளா அரசின் திருவோண பம்பர் லாட்டரி ‘பரிசு ரூ.12 கோடி’: கோவில் ஊழியருக்கு அடித்த ஜாக்பாட்!

இந்த நிலையில் ஓணம் பம்பர் லாட்டரி குலுக்கல் நேற்று முன்தினம் நடைபெற்ற போது, டிபி 173964 என்ற எண் தேர்ந்தெடுக்கப்பட்டது. லாட்டரி வின்னர் அறிவிக்கப்பட்டாலும், அந்த நபர் யார் என மக்கள் ஆர்வத்துடன் தேடி வந்தனர். இதனையடுத்து எர்ணாகுளத்தை சேர்ந்த விஜயன்(24) என்னும் இளைஞருக்கு தான் லாட்டரி அடித்தது என்பது தெரிய வந்தது. இவர் கோவிலில் ஊழியராக பணிபுரிந்து வருகிறாராம். இவரது தந்தை பெயிண்டர். அவர் எப்போதுமே லாட்டரி டிக்கெட்டுகளை வாங்குவதால், அவரிடம் இருந்து தான் பழகிக் கொண்டதாக விஜயன் தெரிவித்துள்ளார்.

கேரளா அரசின் திருவோண பம்பர் லாட்டரி ‘பரிசு ரூ.12 கோடி’: கோவில் ஊழியருக்கு அடித்த ஜாக்பாட்!

லாட்டரி குலுக்கல் அன்று காலையில் தனது நண்பர்களிடம் லாட்டரி பணம் ரூ.12 கோடி எனக்கு தான் என விஜயன் விளையாட்டாக கூறியிருக்கிறார். அது நிஜமாகி விட்டது. பல ஆண்டுகளாக லாட்டரி டிக்கெட்டுகள் வாங்கி வரும் விஜயனுக்கு இந்த ஆண்டு ரூ,12 கோடி பரிசு கிடைத்திருப்பது, பேரானந்தத்தை அளித்திருப்பதாக அவர் கூறியிருக்கிறார்.