திருப்பத்தூரில் எருது விடும் விழா கோலாகலம் ; 300-க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்பு

திருப்பத்தூரில் எருது விடும் விழா கோலாகலம் ; 300-க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்பு

திருப்பத்தூர்

திருப்பத்தூர் மாவட்டம் கந்திலி அடுத்த தோக்கியம் கிராமத்தில் பொங்கல் பண்டிகையை ஒட்டி, எருது விடும் விழா விமரிமையாக நடைபெற்றது. இதில், திருப்பத்தூர், வாணியம்பாடி, நாட்டறம்பள்ளி, பர்கூர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்தும், அண்டை மாநிலமான ஆந்திராவில் இருந்தும் சுமார் 300-க்கும் மேற்பட்ட காளைகள் கலந்துகொண்டன. தொடர்ந்து, வாடிவாசலில் அவிழ்த்துவிடப்பட்ட அலங்கரிக்கப்பட்ட காளைகள் பந்தைய தூரத்தை மின்னல் நோக்கி சீறிப் பாய்ந்து சென்றன.

திருப்பத்தூரில் எருது விடும் விழா கோலாகலம் ; 300-க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்பு

இதனை பாதையின் இருபுறமும் சூழ்ந்திருந்த ஆயிரக்கணக்கான மக்கள் ஆர்வமுடன் கண்டுகளித்தனர். ஒவ்வொரு காளையும் 2 சுற்றுகள் விடப்பட்ட நிலையில், அதிவேகமாக ஓடி முதல் பரிசு சென்ற காளைக்கு 40 ஆயிரம் ரூபாயும், இரண்டாவது பரிசை வென்ற 30 ஆயிரம் ரூபாயும், மூன்றாம் பரிசு பெற்ற காளைக்கு 20ஆயிரமும் ரொக்கப்பரிசு வழங்கப்பட்டது.