கிருஷ்ணகிரியில் எருதுவிடும் விழா… 300-க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்பு…

 

கிருஷ்ணகிரியில் எருதுவிடும் விழா… 300-க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்பு…

கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரியில் பொங்கல் பண்டிகையையொட்டி நடைபெற்ற எருது விடும் விழாவில் 300-க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்றன.

கிருஷ்ணகிரி நகரில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஆண்டுதோறும் எருதுவிடும் விழா நடைபெறுவது வழக்கம். இதன்படி, கிருஷ்ணகிரி பழையபேட்டை பகுதியில் நேற்று விழா நடைபெற்றது. இதில், கிருஷ்ணகிரி மட்டுமின்றி, தருமபுரி, வேலூர், திருப்பத்தூர் மற்றும் அண்டை மாநிலமான ஆந்திராவில் இருந்தும் வந்த 300-க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்றன.

கிருஷ்ணகிரியில் எருதுவிடும் விழா… 300-க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்பு…

தொடர்ந்து, வாடிவாசலில் இருந்து திறக்கப்பட்ட அலங்கரிக்கப்பட்ட காளைகள் பந்தைய தூரத்தை நோக்கி சீறிப்பாய்ந்து சென்றன. இதனை தடுப்புகளின் இருபுறமும் திரண்டு நின்ற ஆயிரக்கணக்கான பொதுமக்கள் ஆர்வமுடன் கண்டுகளித்தனர். போட்டியில், பந்தைய தூரத்தை குறைந்த நேரத்தில் கடந்து முதலிடம் பிடித்த காளையின் உரிமையாளருக்கு ஒரு லட்சத்து 25 ஆயிரம் ரூபாயும், 2ஆம் பிடித்த காளையின் உரிமையாளருக்கு ஒரு லட்சத்து 5 ஆயிரமும், மூன்றாம் பரிசாக 75 ஆயிரமும் வழங்கப்பட்டது.

போட்டியின் போது காளைகள் முட்டியதில் 10 பேர் படுகாயம் அடைந்தனர். அவர்கள் உடனடியாக தயார் நிலையில் இருந்த ஆம்புலன்ஸ் வாகனங்களில் கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.