பிவாண்டியில் கட்டடம் இடிந்து விழுந்து விபத்து : பிரதமர் மோடி இரங்கல்!

 

பிவாண்டியில் கட்டடம் இடிந்து விழுந்து விபத்து :  பிரதமர் மோடி இரங்கல்!

மகாராஷ்டிராவில் கட்டடம் இடிந்து விழுந்ததில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.

பிவாண்டியில் கட்டடம் இடிந்து விழுந்து விபத்து :  பிரதமர் மோடி இரங்கல்!

1984 ஆம் ஆண்டு மகாராஷ்டிரா மாநிலம் தானே மாநகராட்சி பிவாண்டியில் உள்ள ஜிலானி அடுக்குமாடி குடியிருப்பு கட்டப்பட்ட நிலையில் இன்று அதிகாலை 3.30 மணியளவில் கட்டடம் இடிந்து விழுந்தது. அப்போது குடியிருப்பில் இருந்தவர்கள் தூங்கி கொண்டிருந்ததால் அவர்களால் விபத்தில் இருந்து தப்ப முடியவில்லைஇந்த விபத்தில் 10 பேர் சடலங்களாக மீட்கப்பட்ட நிலையில் 25ற்கும் மேற்பட்டோர் காயங்களுடன் மீட்கப்பட்டுள்ளனர் . இருப்பினும் தொடர்ந்து அங்கு மீட்பு பணிகள் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் இதுகுறித்து பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில், மகாராஷ்டிராவின் பிவாண்டியில் கட்டிடம் இடிந்து விழுந்ததை எண்ணி துயரமடைந்தேன். இறந்தவர்களின் குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கல் காயமடைந்தவர்களை விரைவாக மீட்க பிரார்த்திக்கிறேன். தொடர்ந்து மீட்பு நடவடிக்கைகள் நடைபெற்று வருகின்றன. அத்துடன் மேலும் பாதிக்கப்பட்டவர்களுக்கு அனைத்து உதவிகளும் வழங்கப்படுகின்றன என்று பதிவிட்டுள்ளார்.