#Budget2020 நாடாளுமன்றம் வந்தார் நிர்மலா சீதாராமன்

 

#Budget2020 நாடாளுமன்றம் வந்தார் நிர்மலா சீதாராமன்

மத்திய பட்ஜெட்டை நாடாளுமன்றத்தில் நிதியமைச்சர்  நிர்மலா சீதராமன் இன்று தாக்கல் செய்கிறார்.

மத்திய பட்ஜெட்டை நாடாளுமன்றத்தில் நிதியமைச்சர்  நிர்மலா சீதராமன் இன்று தாக்கல் செய்கிறார். பகல்  11 மணியளவில் தாக்கல் செய்யப்படவுள்ள  பட்ஜெட்டில் அதிக வருமானம் பெறுபவர்கள் அதிக வரி செலுத்தும் வகையில் வரி விகிதம் மாற்றப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ttn

அதேபோல் மின்னணு வாகனம், ஏற்றுமதி, ரியல் எஸ்டேட் உள்ளிட்ட துறைகளில் புதிய சலுகைகள் அறிவிக்கப்படும் என்றும் கூறப்படுகிறது. 

ttn

இந்நிலையில் மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்ய நிதியமைச்சர்  நிர்மலா சீதராமன் இன்று  நாடாளுமன்றம் வந்தடைந்தார். முன்னதாக நிர்மலா சீதாராமன்  குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தை சந்தித்து பேசியது குறிப்பிடத்தக்கது.